முக்கோணம்
From Wikipedia, the free encyclopedia
முக்கோணம் அல்லது முக்கோணி (Triangle) என்பது மிகச் சிறிய எண்ணிக்கையுள்ள நேர்கோடுகளால் ஒரு பரப்பை அடைக்க வல்ல ஓர் அடிப்படையான வடிவம். வடிவக்கணித (கேத்திர கணித) அடிப்படை வடிவங்களில் ஒன்று. பெயருக்கு ஏற்றாற் போல் இவ்வடிவம் மூன்று கோணங்களையும் மூன்று உச்சிகளையும் நேர்கோடுகளாலான மூன்று பக்கங்களையும் கொண்ட, ஒரு தட்டையான இரு பரிமாண உருவமாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் முக்கோணம், விளிம்புகள் மற்றும் உச்சிகள் ...
முக்கோணம் | |
---|---|
ஒரு முக்கோணம் | |
விளிம்புகள் மற்றும் உச்சிகள் | 3 |
சிலாஃப்லி குறியீடு | {3} (சமபக்க முக்கோணிக்கு) |
பரப்பளவு | பல வழிகள் உள்ளன; கீழே காண்க |
உட்கோணம் (பாகை) | 60° (சமபக்க முக்கோணி) |
மூடு
யூக்களிடியன் வடிவியலில் ஒரே நேர்கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் ஒர் குறித்த முக்கோணத்தையும் தளத்தையும் வரையறுக்கின்றன.(இருபரிமாண யூக்ளிடியன் வெளி).