யாங்சி ஆறு
சீனாவின் மிகநீளமான ஆறு / From Wikipedia, the free encyclopedia
யாங்சி ஆறு (Yangtze River) அல்லது சாங் சியாங் (Chang Jiang), (listenⓘ; அதாவது: "நீண்ட ஆறு") அல்லது யாங்சி ஜியாங் (listenⓘ) என்பது ஆசியாவிலேயே மிகவும் நீளமான ஆறு ஆகும். இது ஆப்பிரிக்காவில் உள்ள நைல், மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் ஆறுகளுக்கு அடுத்து மூன்றாவது நீளமான ஆறு ஆகும். ஒரே நாட்டிற்குள் முழுமையாக ஓடும் ஆறுகளில் உலகில் மிக நீளமானது இது ஆகும். சீன மொழியில் சாங் ஜியாங் என்பது நீளமான ஆறு எனப்பொருள் தரும். இது சீன மக்கள் குடியரசின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை வளமாக்குகிறது, மேலும் அதன் ஆற்றங்கரையில் நாட்டின் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்கின்றனர். [7] யாங்சே ஆறு வெளியேற்றும் நீரின் அளவில் உலகின் ஆறாவது மிகப்பெரிய நதி ஆகும்.
யாங்சி ஆறு Yangtze (长江) | |
River | |
யாங்சே ஆறு பாயும் நடுப்பகுதி | |
நாடு | சீனா |
---|---|
மாநிலங்கள் | கிங்ஹாய் , திபெத்து, யுன்னான், சிச்சுவான், சோங்கிங், ஹுபேய் , ஹுனான் , ஜியாங்சி , அன்ஹுயி , சியாங்சு, சாங்காய் |
கிளையாறுகள் | |
- இடம் | யோலாங், மின், டுவோ, ஜியாலிங், ஹான் |
- வலம் | வு, யுவான், சி, சியாங், கான், ஹுவாங்பு |
நகரங்கள் | இபின், லுஜோ, சோங்கிங், வான்சோ, யிசாங், ஜிங்ஜோ, யியாங், வுகான், ஜியுஜியாங், அங்கிங், தொங்கிங், வூஹு, நாஞ்சிங், ஜெனியாங், நாந்தோங், சாங்காய் |
உற்பத்தியாகும் இடம் | கெலாடியைடுங் சிகரம் |
- அமைவிடம் | டங்குலா மலைகள், குஇன்காய் |
- உயர்வு | 5,042 மீ (16,542 அடி) |
- ஆள்கூறு | 33°25′44″N 91°10′57″E |
கழிமுகம் | கிழக்கு சீனக் கடல் |
- அமைவிடம் | சாங்காய், மற்றும் சியாங்சு |
- ஆள்கூறு | 31°23′37″N 121°58′59″E |
நீளம் | 6,300 கிமீ (3,915 மைல்) [1] |
வடிநிலம் | 18,08,500 கிமீ² (6,98,266 ச.மைல்) [2] |
Discharge | |
- சராசரி | [3] |
- மிகக் கூடிய | [4][5] |
- மிகக் குறைந்த | |
சீனாவில் யாங்சி ஆற்றின் போக்கு
|
சீனாவின் வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் யாங்சே ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. வளமான யாங்சீ ஆற்று பள்ளத்தாக்கானது சீனாவின் மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% அளவைத் தருகிறது. யாங்சி ஆற்றுப் பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் இப்பகுதியில் வாழக்கூடிய அகணிய உயிரிகள் ஆபத்தான நிலைக்கு உள்ளாகியுள்ளன இதில் குறிப்பாக சீன முதலை, ஃபின்லஸ் கடல்பன்றி, சீன துடுப்பு மீன், யங்ட்கே ஆற்று ஓங்கில் அல்லது பைஜி மற்றும் யாங்க்தெஸ் ஸ்டர்ஜன் போன்ற பல இன உயிர்கள் ஆபத்துக்கு உள்ளான இனங்களா ஆகியுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த ஆற்றின் நீரானது, நீர்ப்பாசனம், போக்குவரத்து, தொழில், எல்லை- அடையாளம், போர் போன்றவற்றிற்று பயன்படுத்தபட்டு வருகிறது. இது தன் அமைவிடம் காரணமாக சீனாவை வடக்கு தெற்காக பிரிக்கும் கோடாக இது கருதப்படுகிறது. இந்த ஆற்றில் கட்டப்பட்ட மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையானது உலகின் மிகப்பெரிய நீர் மின் ஆற்றல் நிலையமாக உள்ளது.[8][9]
சீனாவின் வணிக தலைநகரான சாங்காய் இதன் கழிமுகத்தில் உள்ளது.
அண்மைய ஆண்டுகளில், இந்த ஆலை தொழில்துறை மாசுபாடுகளாலும், சதுப்புநிலம் மற்றும் ஏரிகள் அழிப்பு போன்றவற்றால் பாதிப்புற்றுள்ளது. இது பருவகால வெள்ளத்தை அதிகரிக்கிறது. ஆற்றின் சில பகுதிகள் உள்ள இயற்கை வளங்களை இப்போது பாதுகாக்கின்றனர். மேற்கு யுன்னானின் ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக ஓடும் யாங்சி ஆறின் நீட்சியான யுனன் பாதுகாக்கப்பட்ட பகுதியின் மூன்று இணை ஆறுகளில் ஒரு பகுதி யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக உள்ளது. 2014 நடுப்பகுதியில் சீன அரசாங்கம் இரயில், சாலைகள் மற்றும் விமான நிலையங்களை உள்ளடக்கிய, பல அடுக்கு போக்குவரத்து வலையமைப்பு ஒன்றை ஆற்றுப் பகுதி ஊடாக ஒரு புதிய பொருளாதாரப் பட்டையை, உருவாக்குவதாக அறிவித்தது. [10]
இந்த ஆறு ஏறத்தாழ 6,300 கி.மீ நீளம் உடையது. இது சீனாவின் மேற்குப்பாகத்தில் உள்ள குவிங்காய் மாகாணத்தில் தொடங்கி கிழக்கு நோக்கிப்பாய்ந்து கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது. ஏப்ரல் 22, 2013 புறொசிடிங்குசு ஒஃப் த நேசனல் அகாடமி ஒஃப் சயன்சசு இதழில் வெளியான ஆய்வு அறிக்கையில், சீனாவின் நாஞ்சிங்கு நார்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள கொங்போ செங் என்பவரின் குழு இயாங்சி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.[11] அறிவியலாளர்கள் திபெத்திய சமவெளியின் மேலெழும்பலால் ஏற்பட்ட சீனாவின் நிலத்திணையியலின் மாற்றங்களைப் பொருத்தே இயாங்க்சியின் பிறப்பும் இருக்கும் எனக் கூறியுள்ளனர். இந்த ஆற்றை மூழ்க அடிக்கும் ஆசியாவின் கோடைகால பருவமழையும் இந்த காலங்களிலேயே ஆரம்பம் ஆகின என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.[12]