இலக்குமி
இந்துக்கடவுள் / From Wikipedia, the free encyclopedia
மகாலட்சுமி என்ற பெயரில் வெளிவந்த திரைப்படம் பற்றி அறிய மகாலட்சுமி (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.
இலக்குமி (Lakshmi) அல்லது திருமகள் அல்லது அலைமகள் அல்லது மலர்மகள் என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விட்டுணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.
விரைவான உண்மைகள் லட்சுமி, அதிபதி ...
லட்சுமி | |
---|---|
ரவி வர்மாவின் லட்சுமி ஓவியம் | |
அதிபதி | தானம், வைபவம், சுகம், சந்தோஷம், சக்தி, ஆரோக்கியம், மாங்கல்யத்தின் கடவுள். |
வேறு பெயர்கள் | அட்டலட்சுமி, அம்புசத்தி, அம்புசி, அம்புயத்தி, அம்புயாசனை, அம்புயை, அம்புலிச்சோதரி, அம்போருகத்தாள், அம்போருகை, அரவிந்தை, அரிப்பிரியை, அல்லிமாதர், அலர்மகள், அலர்மேல்மங்கை, அலராள், அலைமகள், அஷ்டலட்சுமி, ஆதிலட்சுமி, இந்திரா, இந்திரை, இரமா, இரமை, இலக்குமி, இலட்சுமி, இளையள், கமலத்தேவி, கமலை, கஜலட்சுமி, கோகனகத்தி, கோகனகை, கோகனதை, சந்தானலட்சுமி, சலசை, சீதேவி, செங்கமலவல்லி, செய்யாள், தனலட்சுமி, தாக்கணங்கு, தானியலட்சுமி, திருமகள், திருமலர்ச்செல்வி, தைரியலட்சுமி, பத்மாசனி, பார்க்கவி, பின்பிறந்தாள், புட்பாசனி, புண்டரிகை, புள்வாய்கீண்டோன், பூமகள், பூமங்கை, பூமன்னு மாது, பூமான், பூமிசை, பூமின், பெரியபிராட்டி, மகாலட்சுமி, மங்கலை, மணிமாலை, மலர்மகள், மலர்மங்கை, மறைத்தலைவி, மாதிரு, மாறிருமார்பினள், முண்டகாசனை, முத்தி, முளரிப்பாவை, லட்சுமி, வரவண்ணினி, வனசை, வாமலோசனை, வாமா, வாமை, வித்யாலட்சுமி, விந்தை, விமலை, விஜயலட்சுமி, வேதநாயகி, வேதமுதல்வி, க்ஷீராப்திதனயை [1] |
தேவநாகரி | लक्ष्मी |
சமசுகிருதம் | lakṣmī |
வகை | தேவி (முத்தேவியர்) |
இடம் | வைகுந்தம், திருப்பாற்கடல் |
மந்திரம் | ஓம் மகாலட்சுமியே நமக |
துணை | விஷ்ணு |
சகோதரன்/சகோதரி | ஜேஷ்டா தேவி (மூத்த சகோதரி), சந்திரன் |
குழந்தைகள் | பிரம்மா, காமதேவன் , 18 மகன்கள், தேவசேனை, வள்ளி |
மூடு