வழக்காறொழிந்த மொழி
From Wikipedia, the free encyclopedia
வழக்காறொழிந்த மொழி (extinct language) என்பது, பேசுபவர்கள் எவரும் இல்லாத ஒரு மொழி ஆகும். இது இறந்த மொழி என்பதிலிருந்து வேறுபட்டது. இறந்த மொழி என்பது முதன்மை மொழியாக எவராலும் பேசப்படாத ஒரு மொழியைக் குறிக்கும். தகுந்த நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதவிடத்து, இந்த நூற்றாண்டின் முடிவில், உலகில் தற்போது பேசப்பட்டுவரும் 6000 க்கு மேற்பட்ட மொழிகளில் அரைவாசிக்கு மேல் வழக்கொழிந்து போய் விடலாம் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது[1]. இவ்வாறு மொழிகள் அழிவதனால் பண்பாட்டு வளங்கள் அழிவதுடன், மொழியில் பொதிந்திருக்கக் கூடிய மூதாதையர்களின் அறிவையும், மனித வரலாற்றின் சில பகுதிகளையும் மனிதர்கள் இழக்க வேண்டி நேரிடும்[2]. உலக மொழிகளில் 90 % மான மொழிகள் 2050 ஆம் ஆண்டளவில் அழிந்துவிடும் என ஒரு அறிக்கை கூறுகின்றது[3].