உடலியக்க மருத்துவம்
From Wikipedia, the free encyclopedia
இயன்முறை மருத்துவம் அல்லது உடலியக்க மருத்துவம் அல்லது உடற்கூற்று மருத்துவம் (physical therapy, physiotherapy) முற்றிலுமாக மருத்துவத்துறை சார்ந்த மருந்தில்லா சிறப்பு மருத்துவ பிரிவு ஆகும். இயன்முறை மருத்துவம் என்பது உடல்நலம் பேணும் தொழில்களில் தனிநபர்கள் வாழ்நாள் முழுமையும் தங்கள் உறுப்புகளின் இயக்கத்தையும் பயன்பாட்டையும் மீட்கவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவுகின்ற மருத்துவத்துறையாகும். வயது, காயம், விபத்து அல்லது சூழல் காரணமாக உறுப்புகளின் இயக்கமும் பயன்பாடும் பாதிக்கப்படும்போது அளிக்கப்படும் மருத்துவ முறைகளைக் கொண்டது.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இயன்முறை மருத்துவம் Physical therapy / physiotherapy | |
---|---|
சமநிலைப் பிரச்சனைகள், முடவியல்வ் உறுப்பு நீக்கம், நோயாளியின் வலிமை, விறைப்புத் தன்மை, கூட்டு வரம்பு இயக்க சமநிலை மற்றும் நடை ஆகியவற்றை ஆய்வு செய்தல் ஆகியவற்றில் நோயாளிகளுடன் பணிபுரியும் இராணுவ உடலியக்க மருத்துவர்கள்]] | |
ICD-9-CM | 93.0-93.3 |
MeSH | D026761 |
இம்மருத்துவம் வாழ்வின் தரத்தை அறியவும் கூடுதலாக்கவும் ஆய்வு செய்கிறது. இயக்கத்தை மேம்படுத்த, காயங்களை தவிர்த்திட, அடிபடும்போது காயத்தின் தீவிரத்தைக் குறைத்தல், ஊனத்தைச் சரிசெய்ய மற்றும் ஊனமுற்றவர் மீளவும் தமது வாழ்க்கைத்தரத்தை பெற்றிட வேண்டிய மருத்துவமுறைகளை குறித்து இம்மருத்துவம் அமைந்துள்ளது. அப்போது எழும் உடல் மற்றும் உளவியல், சமூகநலம் குறித்தும் கவனத்தில் கொள்கிறது. இம்மருத்துவமுறையில் இயங்கு மருத்துவர்கள், நோயாளிகள்/வாடிக்கையாளர்கள், பிற மருத்துவர்கள், குடும்பங்கள், நலம்விரும்பிகள் மற்றும் சூழ்ந்துள்ள சமூகம் முதன்மை பங்கு வகிக்கின்றனர்.[1] இயன்முறை மருத்துவம் (physical medicine)[2] என்பது நவீன உலகில் வளர்ந்து வரும் ஒரு சிறந்த சிறப்பு மருத்தவ துறை & மருத்துவ முறையாகும்.