முடவியல்
உடல்ஊனங்கள் குறித்த தசையும், அது சார்ந்த மருத்துவமும் / From Wikipedia, the free encyclopedia
முடவியல் (orthopedics)அல்லது முடநீக்கியல் துறை, உடல் ஊனங்களைத் திருத்தும் இயலாகும். 1741-இல் பேராசிரியர் நிகோலாய் ஆண்ட்ரோ , (ஆர்த்தோஸ்', ‘பீடிஆஸ்' எனும் இரு கிரேக்கச் சொற்களைக் கொண்டு, குழந்தைகளின் ஊனங்களை நேர் செய்தல்[1]) என்னும் பொருள்படும் 'ஆர்த்தோபீடிக்ஸ்' ( Orthopedics or Orthopedic surgery) என்ற சொல்லை உருவாக்கினார்.
மருத்துவத் துறையில் உடல் ஊனங்களைப் பற்றிய பிரிவை முடவியல் என்றும் முடநீக்கியல் என்றும் கூறலாம். தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில், பண்டைய முடச்சிகிச்சை முறைகளைக் கையாளுபவர்கள், முடவைத்தியர் என்று அழைக்கப்படுகிறார்கள். இக்காலத்தில் முடநீக்கியல் அறுவைத் துறை, குழந்தைகள், பெரியோர் ஆகிய எல்லோருடைய ஊனங்களையும் திருத்துவதோடு, ஊனமுண்டாக்கும் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை செய்யும் துறையாகவும் விளங்குகிறது. எலும்புகளின் அமைப்பையும் சிறப்புத் தன்மைகளையும் அறிவுறுத்துவது எலும்பியலாகும்.