ஐரீன் சூறாவளி (2011)
From Wikipedia, the free encyclopedia
ஐரீன் சூறாவளி (Hurricane Irene) என்பது அமெரிக்காவின் கிழக்கு கரையோரபிரதேசங்களுக்கூடாக நகர்ந்து 2011 ஆகத்து இறுதிப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்திய சூறாவளியைக் குறிக்கும். அட்லாண்டிக் பெருங்கடலில் தோன்றிய 'ஐரீன்" எனப்பெயரிடப்பட்ட இந்த சூறாவளி 1985ல் அமெரிக்காவைத்தாக்கிய, "க்ளோரியா' சூறாவளிக்குப் பின் பாரிய சூறாவளியாகக் கொள்ளப்படுகின்றது. ‘ஐரீன்’ சூறாவளி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தை ஆகத்து 27ம் திகதி தாக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 960 கிலோமீற்றர் விட்டம் கொண்ட இந்த ‘ஐரீன்’ சூறாவளி மணித்தியாலத்திற்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் நகருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் கிழக்கு பிரதேச நகரங்களுக்கு பாரிய சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.[2][3]
விரைவு காரணி தொடக்கம், மறைவு ...
Category 3 major hurricane (SSHWS/NWS) | |
தெற்கு பகாமசில் ஐரீன் சூறாவளி (ஆகத்து 24) | |
தொடக்கம் | ஆகத்து 20, 2011 |
---|---|
மறைவு | ஆகத்து 29, 2011 |
உயர் காற்று | 1-நிமிட நீடிப்பு: 120 mph (195 கிமீ/ம) |
தாழ் அமுக்கம் | 942 பார் (hPa); 27.82 inHg |
இறப்புகள் | 21 நேரடி, 6 மறைமுகம்[1] |
சேதம் | $10.1 பில்லியன் (2011 US$) |
பாதிப்புப் பகுதிகள் | சிறிய அண்டிலிசு, புவெர்ட்டோ ரிக்கோ, டொமினிக்கன் குடியரசு, எயிட்டி, கூபா, துர்கசு கைகோசு தீவுகள், பகாமாசு, புளோரிடா, தென் கரொலைனா, வட கரொலைனா, வெர்ஜீனியா, மேரிலாந்து, டெலவெயர், பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, நியூயார்க், கனெடிகட், ரோட் தீவு, கிழக்கு கனடா |
2011 அத்திலாந்திக் சூறாவளிப் பருவம்-இன் ஒரு பகுதி | |
மூடு