கனடா
வட அமெரிக்க நாடு / From Wikipedia, the free encyclopedia
கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே அமெரிக்க ஒன்றியமும் மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.
விரைவான உண்மைகள் கனடா, தலைநகரம் ...
கனடா | |
---|---|
குறிக்கோள்: A mari usque ad mare (இலத்தீன்) "கடலில் இருந்து கடல் வரை" | |
நாட்டுப்பண்: "ஓ கனடா" | |
தலைநகரம் | ஒட்டாவா 45°24′N 75°40′W |
பெரிய நகர் | தொராண்டோ |
ஆட்சி மொழி(கள்) | |
மக்கள் | கனடியன் |
அரசாங்கம் | கூட்டாட்சி நாடாளுமன்ற அரசியல்சட்ட முடியாட்சி[2] |
• முடியாட்சி | சார்லசு III |
• அளுனர்-நாயகம் | மேரி சைமன் |
• பிரதமர் | ஜஸ்டின் துரூடோ |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மூப்பவை |
• கீழவை | மக்களவை |
விடுதலை ஐ.இ. இடமிருந்து | |
• கனடிய | சூலை 1, 1867 |
திசம்பர் 11, 1931 | |
ஏப்பிரல் 17, 1982 | |
பரப்பு | |
• மொத்தம் | 9,984,670 km2 (3,855,100 sq mi) (2வது) |
• நீர் (%) | 11.76 (2015இன் படி)[3] |
• மொத்த நிலப்பரப்பு | 9,093,507 km2 (3,511,023 sq mi) |
மக்கள் தொகை | |
• Q3 2022 மதிப்பிடு | 38,929,902[4] (37வது) |
• 2021 கணக்கெடுப்பு | 36,991,981[5] |
• அடர்த்தி | 4.2/km2 (10.9/sq mi) (185வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $2.237 டிரில்லியன்[6] (15வது) |
• தலைவிகிதம் | $57,812[6] (22வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $2.221 டிரில்லியன்[6] (8வது) |
• தலைவிகிதம் | $57,406[6] (14வது) |
ஜினி (2018) | 30.3[7] மத்திமம் |
மமேசு (2021) | 0.936[8] அதியுயர் · 15வது |
நாணயம் | கனடா டொலர் ($) (CAD) |
நேர வலயம் | ஒ.அ.நே−3.5 to −8 |
ஒ.அ.நே−2.5 to −7 | |
திகதி அமைப்பு | yyyy-mm-dd (கி.பி.)[9] |
வாகனம் செலுத்தல் | வலது பக்கம் |
அழைப்புக்குறி | +1 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | CA |
இணையக் குறி | .ca |
மூடு
கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.