ஒரூஸ்கான் மாகாணம்
ஆப்கானித்தானின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
ஒரூஸ்கான் (Urōzgān (பஷ்தூ: اروزګان; பாரசீக மொழி: اروزگان), also spelled as Uruzgan, Oruzgan or Orozgan) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இருப்பினும் இந்த பகுதியானது கலாச்சார ரீதியாக, தெற்கின் காந்தகார் மாகாணத்துடன் இணைந்துள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 3,33,500 ஆகும். மேலும் மாகாண மக்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடி மக்களாவர். தரின்கோட் நகரமானது மாகாணத் தலைநகரமாக செயல்படுகிறது..
விரைவான உண்மைகள் ஒரூஸ்கான்Urozgan اروزگان, நாடு ...
ஒரூஸ்கான்
Urozgan اروزگان | |
---|---|
ஆப்கானித்தான் வரைபடத்தில் ஒரூஸ்கான் உயர்நிலம் | |
ஆள்கூறுகள் (Capital): 32.8°N 66.0°E / 32.8; 66.0 | |
நாடு | ஆப்கானித்தான் |
தலைநகரம் | தரின்கோட் |
அரசு | |
• ஆளுநர் | முகம்மது நசீர் கரோடி[சான்று தேவை] |
பரப்பளவு | |
• மொத்தம் | 12,640 km2 (4,880 sq mi) |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 3,33,500 |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-URU |
முதன்மை மொழிகள் | பஷ்தூ and பாரசீகம் |
மூடு
2004 ஆம் ஆண்டு இந்த மாகாணத்தின் வடபகுதியைப் பிரித்து, புதிய மாகாணமாக தேக்கண்டி மாகாணமானம் உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில், கிசாப் மாவட்டமானது தேகண்டி மாகாணத்தில் இருந்து மீண்டும் ஒரூஸ்கான் மாகாணத்துடன் இணைக்கப்பட்டு, மாகாணத்தின் ஆறாவது மாவட்டமாக மாறியது.[சான்று தேவை]