ஆப்கானித்தான்
இசுலாமியக் பயங்கரவாத நாடு ஆகும் / From Wikipedia, the free encyclopedia
ஆப்கானித்தான் அல்லது ஆப்கனிசுத்தான், Afganistan// (கேட்கⓘ);[12] பசுதூ மொழி/தாரி மொழி: افغانستان, Afġānestān) தெற்கு ஆசியாவிற்கும் நடு ஆசியாவிற்கும் குறுக்கே அமைந்துள்ள நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஓர் ஆசிய நாடாகும். இதன் கிழக்கிலும், தெற்கிலும் பாக்கித்தான், மேற்கில் ஈரான், வடக்கில் துருக்மெனித்தான், உசுபெக்கிசுத்தான், வடகிழக்கில் தசிகித்தான், சீனா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. பாக்கித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காசுமீரூடாகச் செல்கிறது. 652,864 சதுர கிலோமீட்டர்கள் (252,072 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்ட இந்நாடு, பெரும்பாலும் மலைத்தொடர்களையும், வடக்கிலும், தென்மேற்கிலும் சமவெளிகளையும் கொண்டுள்ளது. 2020ஆம் ஆண்டின்கணக்கெடுப்பின் படி, இங்கு 31.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பசுதூன், தசிக்கு, கசாரா, உசுபெக் இனத்தவராவர். காபுல் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.
ஆப்கானித்தான்
| |
---|---|
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | காபுல் 33°N 66°E[1] |
ஆட்சி மொழி(கள்) | |
இனக் குழுகள் |
|
சமயம் |
|
மக்கள் | ஆப்கன்,[lower-alpha 1][5][6] |
அரசாங்கம் |
|
அமைப்பு | |
• ஓட்டாக் பேரரசு | 1709–1738 |
1747–1842 | |
• அமீரகம் | 1823–1926 |
• அங்கீகாரம் | 19 ஆகத்து 1919]] |
9 சூன் 1926 | |
• குடியரசு அறிவிப்பு | 17 சூலை 1973 |
7 செப்டம்பர் 1996 | |
• இசுலாமியக் குடியரசு | 26 சனவரி 2004 |
15 ஆகத்து 2021 | |
பரப்பு | |
• மொத்தம் | 652,864[7] km2 (252,072 sq mi) (40-வது) |
• நீர் (%) | negligible |
மக்கள் தொகை | |
• 2020 மதிப்பிடு | 32,890,171[8] (43-வது) |
• அடர்த்தி | 48.08/km2 (124.5/sq mi) (174-வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2018 மதிப்பீடு |
• மொத்தம் | $72.911 பில்லியன்[9] (96-வது) |
• தலைவிகிதம் | $2,024[9] (169-வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2018 மதிப்பீடு |
• மொத்தம் | $21.657 பில்லியன்[9] (111-வத்) |
• தலைவிகிதம் | $493[9] (177-வது) |
ஜினி (2008) | 27.8[10] தாழ் · 1-வது |
மமேசு (2019) | 0.511[11] தாழ் · 169-வது |
நாணயம் | ஆப்கானி (افغانی) (AFN) |
நேர வலயம் | ஒ.அ.நே+4:30 சூரிய நாட்காட்டி (D†) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +93 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | AF |
இணையக் குறி | .af افغانستان. |
ஆப்கானித்தானில் மனிதக் குடியேற்றம் இடைக்காலப் பழைய கற்காலத்திற்கு முந்தையது. அத்துடன் பட்டுப் பாதையில் இந்நாடு அமைந்திருந்ததால், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளுடனான தொடர்புகளுக்கு மூலோபாய இடமாக அமைந்துள்ளது. இந்நிலம் வரலாற்று ரீதியாக பல்வேறு மக்களுக்கு தாயகமாக இருந்து வருகிறது. பேரரசர் அலெக்சாந்தர், மௌரியர், முசுலிம் அராபியர்கள், மங்கோலியர்கள், பிரித்தானிய, சோவியத், மற்றும் 2001 இல் நேட்டோ-நட்பு நாடுகளுடன் அமெரிக்கா உட்படப் பல இராணுவ நடவடிக்கைகளை இந்நாடு கண்டது. வரலாற்றின் பல்வேறு காலங்களில் இது ஆக்கிரமிக்கப்பட்டு வந்திருந்தாலும், இது "வெல்ல முடியாதது" என்றும்,[13][14] "பேரரசுகளின் கல்லறை" என்றும் அழைக்கப்படுகிறது.[15] கிரேக்க பாக்திரியர், குசான்கள், எப்தலைட்டுகள், சமானிதுகள், சஃபாரிதுகள், காசுனவிதுகள், கோரி, கில்சி, முகலாயர், ஓட்டாக்கு, துரானி போன்றோர் பெரிய பேரரசுகளை உருவாக்குவதற்கு இந்த நிலம் ஆதாரமாக இருந்து வந்தது.[16]
இன்றைய ஆப்கானித்தான் 18-ஆம் நூற்றாண்டில் ஒட்டாக்கு, துரானி வம்சங்களுடன் தொடங்கியது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆப்கானித்தான் பிரித்தானிய இந்தியாவிற்கும் உருசியப் பேரரசிற்கும் இடையிலான "பெரும் போட்டியில்" ஒரு இடையக மாநிலமாக மாறியது. 1919 இல் நடந்த மூன்றாம் ஆங்கிலோ-ஆப்கானியப் போரைத் தொடர்ந்து, அந்நாடு வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, இறுதியில் 1926 சூன் மாதம் மன்னர் அமானுல்லாவின் கீழ் ஆப்கானித்தான் இராச்சியமாக மாறியது. இந்த இராச்சியம் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் வரை நீடித்தது. 1973 சூலையில் மன்னர் முகம்மது சாகிர் சா பதவியில் இருந்து அகற்றப்பட்டு ஒரு குடியரசு நிறுவப்பட்டது. 1978 இல், இரண்டாவது இராணுவப் புரட்சிக்குப் பிறகு, ஆப்கானித்தான் ஒரு சோசலிச நாடாக மாறியது, 1980 களில் முசாகிதீன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சோவியத்–ஆப்கான் போரைத் தூண்டியது. 1996ஆம் ஆண்டிற்குள் ஆப்கானித்தானின் பெரும்பகுதி இசுலாமிய அடிப்படைவாதக் குழுவான தாலிபான்களால் கைப்பற்றப்பட்டது, அவர்கள் நாட்டின் பெரும்பகுதியை ஒரு சர்வாதிகார ஆட்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். 2001-இல் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு தலிபான்கள் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டாலும், நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். 2021 தாலிபான் தாக்குதல், அதன் விளைவாகக் காபூலின் வீழ்ச்சி ஆகியவற்றுடன் தாலிபான்கள் மீண்டும் நாட்டை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நாட்டில் பயங்கரவாதம், வறுமை, குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடு, ஊழல் அதிக அளவில் உள்ளது. இது ஐக்கிய நாடுகள் அவை, இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு, 77 குழு, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அணிசேரா இயக்கம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஆப்கானித்தானின் பொருளாதாரம் உலகில் 96-வது நிலையில் உள்ளது. கொள்வனவு ஆற்றல் சமநிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ) 72.9 பில்லியன் டாலர்கள் ஆகும்; தனிநபர் விகிதத்தில் மொ.உ.உ அடிப்படையில் 2018 இல் 186 நாடுகளில் 169 வது இடத்தில் மிக மோசமான நிலையில் உள்ளது.