கிறிஸ்டோப் பெக்
From Wikipedia, the free encyclopedia
ஜீன் கிறிஸ்டோப் பெக் (ஆங்கில மொழி: Jean-Christophe Beck) என்பவர் கனடிய நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இசையமைப்பாளர் ஆவார். இவர் தி ஹேங்கொவர் (2009), தி மப்பேட்ஸ் (2011), புரோசன் (2013), புரோசன் II (2019) மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படங்களான ஆன்ட்-மேன் (2015) மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கிறிஸ்டோப் பெக் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஜீன் கிறிஸ்டோப் பெக் |
பிறப்பு | நவம்பர் 30, 1972 (1972-11-30) (அகவை 51)[1][2] மொண்ட்ரியால், கனடா |
இசை வடிவங்கள் | திரைப்படம், தொலைக்காட்சி |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
1998 ஆம் ஆண்டு பப்பி தி வாம்பயர் ஸ்லேயர் என்ற தொலைக்காட்சித் தொடருக்காக சிறந்த இசை அமைப்பிற்கான பிரைம் டைம் எம்மி விருதை வென்றுள்ளார். டிஸ்னி+ என்ற ஓடிடி தளத்திற்காக வாண்டாவிஷன் என்ற இணையத் தொடருக்கும் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இதுவரைக்கும் ஒரு பிரைம் டைம் எம்மி மற்றும் அன்னி விருது போன்றவற்றை வென்றுள்ளார், மேலும் ஒரு பிரைம் டைம் எம்மி, இரண்டு அன்னி விருதுகள் மற்றும் ஒரு கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.