குலு
From Wikipedia, the free encyclopedia
குலு (Kullu) என்பது இந்திய மாநிலமான, இமாச்சலப் பிரதேசத்தின், குல்லு மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக செயல்படும் ஒரு நகரமாகும். இது பூந்தார் வானூர்தி நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் குலு பள்ளத்தாக்கில் பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
Kullu
குலு | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 31.95°N 77.11°E / 31.95; 77.11 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | குல்லு |
அரசு | |
• வகை | Democratic |
ஏற்றம் | 1,279 m (4,196 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 18,536 |
• தரவரிசை | 11th in HP |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 175101 |
தொலைபேசி குறியீடு | 01902 |
வாகனப் பதிவு | HP HP 34 HP 66 |
பாலின விகிதம் | 1.17 (1000/852) ♂/♀ |
இணையதளம் | www.hpkullu.nic.in |
குலு பள்ளத்தாக்கு என்பது மணாலி மற்றும் லர்ஜி இடையே பியாஸ் ஆற்றால் உருவாக்கப்பட்ட ஒரு பரந்த திறந்த பள்ளத்தாக்கு ஆகும். இந்த பள்ளத்தாக்கானாது அதில் அமைந்துள்ள கோயில்கள் மற்றும் பைன், தேவதாரு காடுகள் மற்றும் பரந்த ஆப்பிள் தோப்புகள் நிரம்பிய மலைகளுக்கு பெயர் பெற்றது. பியாஸ் குண்ட்டில் [1] இருந்து உருவாகும் பியாஸ் ஆற்றின் போக்கு, வரிசையாக அற்புதமான, தேவதாரு காடுகளால் மூடப்பட்டும், உயர்ந்த பைன் மரக்காடுகளும் கொண்டதாக, இந்த அற்புதமான நகரத்தின் வெளிப்பகுதி உள்ளது. குலு பள்ளத்தாக்கு இந்தியாவின் தலைநகரில் இருந்து 497 கிமீ தொலைவில் வட இந்தியாவில் அமைந்துள்ள பிர் பஞ்சால், கீழ் இமயமலை மற்றும் பெரிய இமயமலைத் தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ளது.