செனிகல் தேசிய காற்பந்து அணி
From Wikipedia, the free encyclopedia
செனிகல் தேசிய காற்பந்து அணி (Senegal national football team) பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் செனிகலின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, செனிகல் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது.
விரைவான உண்மைகள் அடைபெயர், கூட்டமைப்பு ...
அடைபெயர் | Les Lions de la Téranga (தெராங்காவின் சிங்கங்கள்) | |
---|---|---|
கூட்டமைப்பு | செனிகல் காற்பந்துக் கூட்டமைப்பு | |
மண்டல கூட்டமைப்பு | மேற்கு ஆப்பிரிக்கக் காற்பந்துக் கூட்டமைப்பு | |
கண்ட கூட்டமைப்பு | ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு | |
தன்னக விளையாட்டரங்கம் | லெயோப்போல்ட் சேடார் செங்கோர் அரங்கு | |
பீஃபா குறியீடு | SEN | |
பீஃபா தரவரிசை | 28 (17 மே 2018) | |
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 23 (நவம்பர் 2017) | |
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 99 (சூன் 2013) | |
எலோ தரவரிசை | 27 (20 ஏப்ரல் 2018) | |
அதிகபட்ச எலோ | 15 (நவம்பர் 2016) | |
குறைந்தபட்ச எலோ | 100 (அக்டோபர் 1994) | |
| ||
முதல் பன்னாட்டுப் போட்டி | ||
பிரித்தானிய காம்பியா 1–2 பிரெஞ்சு செனிகல் (காம்பியா; 1959) | ||
பெரும் வெற்றி | ||
செனிகல் 7–0 மொரிசியசு (டக்கார், செனிகல்; 9 அக்டோபர் 2010) | ||
பெரும் தோல்வி | ||
செக்கோசிலோவாக்கியா 11–0 செனிகல் (பிராகா, செக்கோசிலோவாக்கியா; 2 நவம்பர் 1966) | ||
உலகக் கோப்பை | ||
பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 2002 இல்) | |
சிறந்த முடிவு | காலிறுதிகல், 2002 | |
ஆப்பிரிக்கக் கோப்பை | ||
பங்கேற்புகள் | 14 (முதற்தடவையாக 1965 இல்) | |
சிறந்த முடிவு | இரண்டாமிடம், 2002 |
மூடு
செனிகல் அணி தனது முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியை 2002 ஆம் ஆண்டில் விளையாடி குழு நிலை ஆட்டத்தின் முதலாவது போட்டியில் உலக, ஐரோப்பிய வாகையாலரான பிரான்சை 1–0 என்ற கணக்கில் வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இறுதியில் காலிறுதி வரை அது முன்னேறியது. உலக்கோப்பை ஒன்றில் காலிறுதி வரை முன்னேறிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக சாதனை படைத்தது. முன்னதாக கமரூன் 1990 இலும், கானா 2010 இலும் காலிறுதியில் விளையாடின.[1][2] செனிகல் 2018 உலகக் கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றது.