ஜான்சி
From Wikipedia, the free encyclopedia
ஜான்சி ஒலிப்புⓘ (உருது: جھانسی, இந்தி: झांसी, மராத்தி:झांशी) என்பது வட இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் உள்ள ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். ஜான்சி சாலை மற்றும் தொடர்வழிப்பாதையின் முக்கியச் சந்திப்பாக இருக்கிறது. ஜான்சி நகரம் ஜான்சி மாவட்டம் மற்றும் ஜான்சி மண்டலத்தின் நிர்வாக தலைமை இடமாகவும் உள்ளது. முதன்முதலில் சுவரெழுப்பப்பட்ட நகரமான இது கல் கோட்டையைச் சுற்றி வளர்ச்சியடைந்து பக்கத்திலுள்ள மலையின் சிகரமாகவும் இருக்கிறது.
ஜான்சி | |
---|---|
மாநகரம் | |
அடைபெயர்(கள்):
| |
ஆள்கூறுகள்: 25°26′55″N 78°34′11″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மண்டலம் | புந்தேல்கண்ட் |
மாவட்டம் | ஜான்சி |
தோற்றுவித்தவர் | ஓர்ச்சா மன்னர் |
அரசு | |
• மாநகரத்தந்தை | இராம் தீர்த் சிக்ங்கால் (பாஜக) |
• ஆட்சித்தலைவர் | இரவீந்திர குமார், இ.ஆ.ப.[1] |
• மாவட்ட கண்காணிப்பாளர் (முதுநிலை) | சிவகரி மீனா, இ.கா.ப.[2] |
பரப்பளவு | |
• மாநகரம் | 160 km2 (60 sq mi) |
ஏற்றம் | 285 m (935 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகரம் | 5,05,693[3] |
• தரவரிசை | 57 |
• பெருநகர் | 5,47,638[3][4][5] |
மொழி | |
• அலுவல் | இந்தி[6] |
• Additional official | உருது[6] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 284 001-2-3-4 |
தொலைபேசி குறியீடு | 0510 |
வாகனப் பதிவு | UP-93 |
பாலின விகிதம் | ♂ 0.905 : ♀ 1.000 |
எழுத்தறிவு (சராசரி) | 73.90% |
எழுத்தறிவு | 83.0% |
சராசரி கோடை வெப்பநிலை | 42.4 °C (108.3 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 4.0 °C (39.2 °F) |
இணையதளம் | www |
அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம், ஜான்சியின் வளர்ச்சியில் ஒரு தீப்பொறியாக அமைந்தது. காஷ்மீர்-ஐ கன்னியாகுமரியுடன் இணைக்கும் வடக்கு-தெற்கு இடைவழி, ஜான்சி வழியாகச் செல்கிறது. கிழக்கு-மேற்கு இடைவழியும் கூட இந்த நகரின் ஊடாகச் செல்கிறது. இதன் காரணமாக நகரின் உள்கட்டுமானம் மற்றும் நகர மேம்பாட்டில் திடீர் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு பச்சைப்புல்வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டமும் செயல்வடிவில் இருக்கிறது.[7] ஜான்சி தலைநகர் தில்லியிலிருந்து 410 கி.மி. தொலைவிலும் குவாலியரிலிருந்து 102 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[8][9][10]