டிரேக் கடல் பெருவழி
அண்டார்டிகா மற்றும் தென் அமெரிக்காவுக்கு இடைப்பட்ட நீர்பரப்பு / From Wikipedia, the free encyclopedia
டிரேக் கடல் பெருவழி (Drake Passage எசுப்பானியம்: Pasaje de Drake ) அல்லது மார் டி ஹோசஸ் -ஹோசசின் கடல் என்பது தென் அமெரிக்காவின் ஹார்ன் முனை, சிலி மற்றும் அந்தாட்டிக்காவின் தென் ஷெட்லான்ட் தீவுகளுக்கு இடையில் உள்ள பெருங்கடல் பெருவழி ஆகும். இது அட்லாண்டிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியை ( ஸ்கோடியா கடல் ) பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கு பகுதியுடன் இணைத்து தென்முனைப் பெருங்கடலில் நீண்டுள்ளது.