நவி மும்பை
From Wikipedia, the free encyclopedia
நவி மும்பை (Navi Mumbai, மராத்தி: नवी मुंबई, IAST: Navi Muṃbaī) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் தானே மாவட்டம் மற்றும் ராய்கர் மாவட்டத்தின் பகுதிகளின் மேற்கு கடலோரத்தில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் துணை நகரமாகும். 1972ஆம் ஆண்டு மும்பையின் இரட்டை நகரமாக நவி மும்பை மாநகராட்சியின் கீழ் 163 சதுர கிலோமீட்டர்கள் (63 sq mi)பரப்பிலும் மற்றும் மொத்தம் 344 சதுர கிலோமீட்டர்கள் (133 sq mi) பரப்பளவிலும் திட்டமிடப்பட்டது.[1] இது மும்பை பெருநகரப் பகுதியாகும்.
நவி மும்பை नवी मुंबई | |||||||||
21ஆம் நூற்றாண்டின் நகரம் | |||||||||
— நகரம் — | |||||||||
அமைவிடம் | 19°02′N 73°01′E | ||||||||
நாடு | இந்தியா | ||||||||
மாநிலம் | மகாராட்டிரம் | ||||||||
மாவட்டம் | தானே மாவட்டம், ராய்கர் மாவட்டம் | ||||||||
ஆளுநர் | ரமேஷ் பைஸ் | ||||||||
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே | ||||||||
மாநகராட்சி ஆணையர் | விஜய் நகாதா | ||||||||
மேயர் | சாகர் நாய்க் | ||||||||
மக்களவைத் தொகுதி | நவி மும்பை नवी मुंबई | ||||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
2,600,000 est. (2008[update]) • 4,332/km2 (11,220/sq mi) | ||||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||||
பரப்பளவு • உயரம் |
344 கிமீ2 (133 சதுர மைல்) • 10 மீட்டர்கள் (33 அடி) | ||||||||
குறியீடுகள்
| |||||||||
இணையதளம் | www.nmmconline.com | ||||||||
நவி மும்பை மாநகராட்சியின் சின்னம் |
தானே கடற்கழியின் கிழக்கில் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் நவி மும்பை அமைந்துள்ளது. நகரத்தின் எல்லைகளாக வடக்கில் தாணே அருகில் உள்ள ஐரோலியும் தெற்கில் உரான் பகுதியும் உள்ளன. இதன் நீளம் மும்பையின் நீளத்தை ஒத்துள்ளது. வாஷி கடற்பாலமும் ஐரோலி கடற்பாலமும் தீவு நகரமான மும்பையுடன் நவி மும்பையை இணைக்கிறது.