புரோட்டான் சாகா
From Wikipedia, the free encyclopedia
புரோட்டான் சாகா (Proton Saga) என்பது மலேசியாவின் புரோட்டோன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் தானுந்து வாகனங்கள் ஆகும். இவை ஜப்பானில் தயாரிக்கப்படும் மிட்சுபிசி லான்சர் (Mitsubishi Lancer Fiore) ரகத்தைச் சார்ந்தவை. முதல் புரோட்டான் சாகா வாகனம் 1985 ஜூலை 9 இல் வெளியானது.[1] முதல் தலைமுறை புரோட்டான் சாகா வாகனங்கள் 1985-லிருந்து 2005-ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்டன.
உற்பத்தியாளர் | புரோட்டோன் |
---|---|
வேறு பெயர் | மலிவு வாகனம் |
உற்பத்தி | 1985–தற்போது வரை |
பொருத்துதல் | ஷா ஆலாம், சிலாங்கூர், மலேசியா |
வகுப்பு | தானுந்து |
உடல் வடிவம் | 4-கதவு ஒரு-பெட்டி |
திட்ட அமைப்பு | FF அமைப்பு |
இயந்திரம் |
|
செலுத்தும் சாதனம் | MT/AT |
சில்லு அடிப்பாகம் | 2,600 mm (102.4 அங்) |
நீளம் | 4,278 mm (168.4 அங்) |
அகலம் | 1,680 mm (66.1 அங்) |
உயரம் | 1,520 mm (59.8 அங்) |
குறட்டுக்கல் எடை | 1,025 kg (2,260 lb)–635 kg (1,400 lb) |
Related | புரோட்டான் சாகா |
இரண்டாம் தலைமுறை வாகனங்கள் 2008 ஜனவரி 18 இல் இருந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன.[2] சாகா (Adenanthera Pavonina, மலாய்: Saga) என்றால், குண்டுமணி என்று பொருள். குண்டுமணி மரங்கள் மலேசியாவில் சாதாரணமாகக் காணப்படுபவை. மலேசியாவின் முதல் வாகனம் வெளிவருவதற்கு முன்னர், அதற்கு பெயர் வைக்கும் போட்டி நடத்தப்பட்டது. இஸ்மாயில் ஜாபார் என்பவர் சாகா என்று பெயர் வைத்தார்.[3] அவருக்கு ஒரு சிகப்பு நிறக் கார் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.[4]
புரோட்டான் சாகா கார் மலேசியாவின் தேசிய சின்னமாகக் கருதப்படுகிறது. புரோட்டான் சாகா வாகனம் தயாரிக்கப்பட்டதும், முதல் வாகனம் மலேசிய தேசிய அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இரண்டாவது வாகனம், சாகா என்று பெயர் சூட்டிய இஸ்மாயில் ஜாபாருக்கு வழங்கப்பட்டது.
புரோட்டான் சாகாவின் ஓர் இலட்சத்தாவது வாகனம் ஜனவரி 1989 இல் வெளியானது. 1996 இல் பத்து இலட்சத்தாவது வாகனம் வெளிவந்தது.[5] இதுவரையில், 12 இலட்சம் புரோட்டான் சாகா முதல் தலைமுறை வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் இரண்டாம் தலைமுறை வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
2012 ஆம் ஆண்டு வரையில் மலேசியாவில் மட்டும் 35 இலட்சம் புரோட்டான் சாகா வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் 3.10,000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.[6]