புளோரைடு
From Wikipedia, the free encyclopedia
புளோரைடு (Fluoride /ˈflʊəraɪd/ [3] /ˈflɔːraɪd/ /ˈflɔːraɪd/)[3]) என்பது F− என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட புளோரினின் ஒற்றை அணு எதிர்மின் அயனியாகும். இதனுடைய உப்புகளும் கனிமங்களும் வேதியியலில் முக்கியமான வினைப்பொருள்களாகவும் தொழிற்சாலை வேதிப்பொருள்களாகவும் கருதப்படுகின்றன. புளோரோ கார்பன்களுக்கான ஐதரசன் புளோரைடை உற்பத்தி செய்யப் பயன்படுவது இதனுடைய பிரதான பயனாகக் கருதப்படுகிறது. புளோரைடு அயனியின் மின்சுமை மற்றும் அளவை ஒப்பிடுகையில் இது ஐதராக்சைடு அயனியின் மின்சுமை மற்றும் அளவை ஒத்ததாக உள்ளது. பூமியில் பல்வேறு கனிமங்கள் வடிவில் புளோரைடு அயனி கிடைக்கிறது என்றாலும் குறிப்பாக புளோரைட்டாக அதிக அளவில் கிடைக்கிறது. தண்ணீரில் மிகச்சிறிதளவே இது காணப்படுகிறது. தனித்துவமான கசப்புச் சுவையைக் கொண்ட புளோரைடு அயனி அதன் உப்புகளுக்கு எந்தவிதமான நிறத்தையும் அளிப்பதில்லை.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
புளோரைடு[1] | |||
இனங்காட்டிகள் | |||
16984-48-8 Y | |||
ChEBI | CHEBI:17051 | ||
ChEMBL | ChEMBL1362 Y | ||
ChemSpider | 26214 Y | ||
Gmelin Reference |
14905 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C00742 Y | ||
ம.பா.த | புளோரைடு | ||
பப்கெம் | 28179 | ||
| |||
பண்புகள் | |||
F− | |||
வாய்ப்பாட்டு எடை | 19.00 g·mol−1 | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−333 கியூ மோல்−1 | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
145.58 யூல்/மோல் K (வாயு நிலை)[2] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||