மெட்பார்மின்
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
மெட்பார்மின் (Metformin) என்றும், வணிக ரீதியில் குளுகோபேகே (Glucophage) என்றும் விற்கப்படும் மருந்தானது, வகை 2 நீரிழிவுக்கான மருந்தாகவும், [5] குறிப்பாக அதிக எடை கொண்ட நீரிழிவு நோயாளிகளின் சிகிழ்ச்சையில் பயன்படும் மருந்தாகவும் விளங்குகிறது.[6] பல்பையுரு கருப்பை நோய்க்குறியின் சிகிச்சையிலும் மெட்பார்மினைப் பயன்படுத்துவது உண்டு. நீரிழிவின் காரணமான இதய நோய் மற்றும் புற்றுநோய் என்பவற்றை மெட்பார்மின் தடுப்பதாக ஓரிரு ஆய்வுகள் சொல்கின்றன.[7][8] எடை அதிகரிப்புடன் தொடர்பற்ற மெட்பார்மினானது, வாய் வழியாக எடுக்கப்படுகின்ற ஒரு மருந்தாகும்.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
N,N-Dimethylimidodicarbonimidic diamide | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | Fortamet, Glucophage, Glumetza, others |
AHFS/திரக்ஃசு.காம் | ஆய்வுக் கட்டுரை |
மெட்லைன் ப்ளஸ் | a696005 |
கட்டுப்பாட்டு உரிமத் தரவு | EMA:[[[:வார்ப்புரு:EMA-EPAR]] Link], US Daily Med:link |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | C(AU) |
சட்டத் தகுதிநிலை | Prescription Only (S4) (AU) ?-only (CA) POM (UK) ?-only (அமெரிக்கா) |
வழிகள் | By mouth |
மருந்தியக்கத் தரவு | |
உயிருடலில் கிடைப்பு | 50–60%[1][2] |
புரத இணைப்பு | Minimal[1] |
வளர்சிதைமாற்றம் | Not by liver[1] |
அரைவாழ்வுக்காலம் | 4–8.7 hours[1] |
கழிவகற்றல் | Urine (90%)[1] |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 657-24-9 Y |
ATC குறியீடு | A10BA02 A10BD23 A10BD02 A10BD18 A10BD11 A10BD25 A10BD22 A10BD14 A10BD16 A10BD17 A10BD05 A10BD15 A10BD07 A10BD10 A10BD13 A10BD20 A10BD08 A10BD03 |
பப்கெம் | CID 4091 |
IUPHAR ligand | 4779 |
DrugBank | DB00331 |
ChemSpider | 3949 Y |
UNII | 9100L32L2N Y |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D04966 Y |
ChEBI | Y |
ChEMBL | CHEMBL1431 Y |
ஒத்தசொல்s | N,N-dimethylbiguanide[3] |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C4 |
இயற்பியல் தரவு | |
அடர்த்தி | 1.3±0.1[4] g/cm? |
மெட்பார்மினைப் பயன்படுத்துவதால், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வயிற்று வலி முதலான பக்கவிளைவுகள் ஏற்படலாம். குறைந்த இரத்த சர்க்கரையை அது ஏற்படுத்துவதற்கு குறைந்தபட்ச வாய்ப்புள்ளது. அதிகளவில் ஊட்டப்பட்டாலோ, முறையின்றி பரிந்துரைக்கப்பட்டாலோ, மெட்பார்மின் உயர் இரத்த லாக்டிக் அமிலம் நிலையை உண்டாக்கலாம்..[9] கல்லீரல் நோய் அல்லது சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் மெட்பார்மினைப் பயன்படுத்தக் கூடாது கர்ப்ப காலத்தில் இதைப் பயன்படுத்துவதால் சிக்கல் எதுவும் இருப்பதாக, இதுவரை அறியப்படாத போதும், கர்ப்பகால நீரிழ்வில் இன்சுலினே பொதுவாக விரும்பப்படுகிறது.[10] ஈரல் மூலமான குளுக்கோசு உற்பத்தியைக் குறைப்பதன் மூலமும், உடல் இழையங்களின் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலமும் மெட்போர்மின் தொழிற்படுகிறது.