லீலா மிஸ்ரா
இந்திய திரைப்பட நடிகை / From Wikipedia, the free encyclopedia
லீலா மிஸ்ரா (Leela Mishra) (1 சனவரி 1908[1] - 17 சனவரி 1988) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஐந்து தசாப்தங்களாக 200க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில்]] குணச்சித்திர நடிகையாகப் பணியாற்றினார். மேலும் அத்தை ( சாச்சி அல்லது மௌசி ) போன்ற பங்கு கதாபாத்திரங்களில் நடித்ததற்காக இவர் நன்கு நினைவுகூரப்படுகிறார். இவர் சோலே (1975), தில் சே மைல் தில் (1978), பேடன் பேடன் மெய் (1979), ராஜேஷ் கன்னாவின் பால்கோன் கி சாவ்ன் மெய், அஞ்சல், மெஹபூபா, அமர் பிரேம், ராஜ்ஸ்ரீ புரொடக்சன்ஸின் ஹிட் கீத் காதா சால் (1975), நதியா கே பார் (1982) அபோத் (1984) போன்ற படங்களில் "அத்தை" பாத்திரத்திற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[2][3][4] 1981 ஆம் ஆண்டில் வெளியான நானி மா என்ற படத்தில் இவரது சிறந்த நடிப்பிற்காக இவர் தனது 73வது வயதில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
விரைவான உண்மைகள் லீலா மிஸ்ரா, பிறப்பு ...
லீலா மிஸ்ரா | |
---|---|
பியாசா (1957) படத்தில் லீலா மிஸ்ரா | |
பிறப்பு | (1908-01-01)1 சனவரி 1908 ஜைஸ், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 17 சனவரி 1988(1988-01-17) (அகவை 80) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
மற்ற பெயர்கள் | லீலா மிஸ்ரா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1936–1986 |
அறியப்படுவது | சோலே (1975) படத்தில் அத்தை வேடம் |
வாழ்க்கைத் துணை | இராம் பிரசாத் மிஸ்ரா |
மூடு