கசக்கஸ்தான்
நடு ஆசியாவிலுள்ள ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
கசக்குத்தான் (/ˌkɑːzəkˈstɑːn/ (கேட்கⓘ) அல்லது /ˌkæzəkˈstæn/; காசாக்கு மொழி: Қазақстан Qazaqstan, உருசியம்: Казахстан [kəzɐxˈstan]), அதிகாரபூர்வமாக கசக்குத்தான் குடியரசு, என்பது நடு ஆசியாவிலுள்ள ஒரு கண்டம் கடந்த தொடர்ச்சியான நாடாகும். இதன் ஒரு சிறுபகுதி கிழக்கு ஐரோப்பாவில் யூரல் ஆற்றுக்கு மேற்கே அமைந்துள்ளது.[2] கசக்குத்தான் உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடாகவும் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகவும் உள்ளது. 2,727,300 சதுர கிலோமீட்டர்கள் (1,053,000 sq mi) பரப்பளவு கொண்ட இதன் பகுதி மேற்கு ஐரோப்பாவிலும் பெரியதாகும்.[2][7] இதன் எல்லைகளாக (வடக்கிலிருந்து வலஞ்சுழியாக) உருசியா, சீனா, கிர்கித்தான், உசுபெகித்தான், துர்க்மெனித்தான் மற்றும் கசுபியன் கடலின் பெரும்பகுதியும் காணப்படுகின்றன. கசக்குத்தானின் நிலவமைப்பு வெட்டவெளிகள், புல்வெளிகள், தைக்கா காடுகள், மலைப் பள்ளத்தாக்குகள், மலைகள், கழிமுகங்கள், பனிச்சிகரங்கள் மற்றும் பாலைவனங்களைக் கொண்டுள்ளது.இதன் மக்கள்தொகை (2013 கணிப்பீடு) 17 மில்லியனாகும்.[8] மக்கள்தொகை அடிப்படையில் கசக்குத்தான் 62ம் இடத்திலுள்ளது. எனினும் இதன் மக்கள்தொகை அடர்த்தி சதுரக்கிலோமீற்றருக்கு 6 பேருக்கும் குறைவாகும். (சதுர மைலுக்கு 15 பேர்). 1997ல் இதன் தலைநகர் அல்மாடியிலிருந்து அஸ்தானாவுக்கு மாற்றப்பட்டது.
கசக்கஸ்தான் குடியரசு
| |
---|---|
நாட்டுப்பண்: Менің Қазақстаным மெனின் கசக்கஸ்தானிம் எனது கசக்கஸ்தான் | |
தலைநகரம் | நூர் சுல்தான் |
பெரிய நகர் | அல்மாத்தி |
ஆட்சி மொழி(கள்) | |
இனக் குழுகள் (2009[1]) |
|
மக்கள் | கசாக்[2] |
அரசாங்கம் | ஓரவை சனாதிபதி ஆட்சி |
• சனாதிபதி | நர்சுல்தான் நசர்பாயேவ் |
• பிரதமர் | செரிக் அக்மதோவ் |
சட்டமன்றம் | பாராளுமன்றம் |
• மேலவை | செனட் சபை |
• கீழவை | மஜிலிசு |
சுதந்திர நாடு சோவியத் ஒன்றியத்திடமிருந்து | |
பரப்பு | |
• மொத்தம் | 2,724,900 km2 (1,052,100 sq mi) (9வது) |
• நீர் (%) | 1.7 |
மக்கள் தொகை | |
• 2013 மதிப்பிடு | 16,967,000[3] (61வது) |
• அடர்த்தி | 5.94/km2 (15.4/sq mi) (224வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2012 மதிப்பீடு |
• மொத்தம் | $231.787 பில்லியன்[4] |
• தலைவிகிதம் | $13,892[4] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2012 மதிப்பீடு |
• மொத்தம் | $196.419 பில்லியன்[4] |
• தலைவிகிதம் | $11,772[4] |
ஜினி (2008) | 28.8[5] தாழ் |
மமேசு (2013) | 0.754[6] உயர் · 69வது |
நாணயம் | தெங்கே (₸) (KZT) |
நேர வலயம் | ஒ.அ.நே+5 / +6 (West / East) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +7-6xx, +7-7xx |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | KZ |
இணையக் குறி |
|
கசக்குத்தானின் பகுதிகளில் வரலாற்றுக்காலம் முதல் நாடோடிக் குழுக்கள் குடியேறியுள்ளனர். 13ம் நூற்றாண்டில் செங்கிசு கான் நாட்டைக் கைப்பற்றிய பின் இது மாற்றமுற்றது. எனினும் அவனது குடும்பத்தினரின் அதிகாரப் போட்டி காரணமாகக் கசக்குத்தானின் ஆட்சி நாடோடிக் குழுக்களிடம் கைமாறியது. 16ம் நூற்றாண்டில் கசாக்குகள் ஒரு தனித்துவமான குழுவாக எழுச்சி பெற்றதுடன் மூன்று கோத்திரங்களாகவும் பிளவுற்றனர்.18ம் நூற்றாண்டளவில் உருசியர்கள் கசாக்கு சுடெப்பீ புல்வெளிகள் நோக்கி முன்னேறியதுடன் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கசக்குத்தானின் சகல பகுதிகளும் உருசியப் பேரரசின் ஒரு பகுதியாகியது. 1917ன் உருசியப் புரட்சியின் பின்பும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போரைத் தொடர்ந்தும், கசக்குத்தானின் பகுதிகள் மீளமைக்கப்பட்டு 1936ல், கசாக்கு சோவியத் சமவுடமைக் குடியரசு எனும் பெயரில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியானது.
1991ல் சோவியத் ஒன்றியத்தின் சிதறலையடுத்து இறுதியாக விடுதலையை அறிவித்த நாடு கசக்குத்தானாகும். தற்போதைய சனாதிபதியான நர்சுல்தான் நசர்பாயேவ் அவர்களே 1990இலிருந்து நாட்டின் தலைவராக உள்ளார். நாட்டின் அரசியலில் நசர்பாயேவ் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளார். விடுதலையடைந்ததிலிருந்து கசக்குத்தான் ஒரு சமநிலை வாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதுடன் தனது பொருளாதாரத்தை விருத்தி செய்வதிலும், குறிப்பாகத் தனது ஐதரோகாபன் கைத்தொழிலை விருத்தி செய்வதிலும் ஈடுபட்டுள்ளது.[9]
கசக்குத்தான் கலாசார மற்றும் இனப்பல்வகைமையுடைய நாடாகும். சோசப் சுடாலினின் ஆட்சியின்போது பல்வேறு இனக்குழுக்களின் நாடுகடத்தலும் இதற்குக் காரணமாகும். கசக்கஸ்தானின் சனத்தொகை 16.6 மில்லியனாக இருப்பதோடு 131 இனக் குழுக்களும் காணப்படுகின்றது. இவற்றுள் கசாக்குகள், உருசியர், உக்ரேனியர், செருமானியர், உசுபெக்கியர், தாத்தார்கள் மற்றும் உய்குர்கள் என்போர் குறிப்பிடத்தக்கோர். சனத்தொகையில் 63%மானோர் கசாக்குகளாவர்.[1] கசக்குத்தான் சமயச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது. கசக்குத்தான் ஓரளவு மதச் சகிப்புத்தன்மையுள்ள நாடாகும். ஆயினும் பிற்காலத்தில், மதச் சுதந்திர மீறல்களுக்காகச் சர்வதேச கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரந்துக்கான ஆணைக்குழு 2013ல் வெளியிட்ட அறிக்கையில், "இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இறுக்கமான சட்டங்களின் பிரயோகம் காரணமாகக் கசாக்ஸ்தானினின் சர்வதேச மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதோடு பல கசாக்கு மக்களின் சமயச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளது.[10] சனத்தொகையில் 70%மானோர் இசுலாமியராக இருப்பதோடு, 26%மானோர் கிறித்தவராவர்.[11] நாட்டின் தேசிய மொழியாகக் கசாக்கு மொழி இருப்பதோடு, உருசிய மொழி உத்தியோகபூர்வ நிலையிலுள்ளது. சகல மட்டங்களிலுமுள்ள ஆவணங்களிலும் இரு மொழிகளும் இடம்பெற்றுள்ளன.[2][12]