கஜுராஹோ
From Wikipedia, the free encyclopedia
கஜுராஹோ (Khajuraho, ஒலிப்பு உதவிⓘ) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில், சத்தர்பூருக்கு அருகிலுள்ள ஒரு நகரம் ஆகும். இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கஜுராஹோ, மிகப்பெரிய அளவிலான இடைக்கால இந்து மற்றும் சைன கோயில்களைக் கொண்டுள்ளது. இது அதில் உள்ள சிற்றின்ப சிற்பங்களுக்கு பிரபலமானது. கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி 1986-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டு இந்தியாவின் "ஏழு அதிசயங்களில்" ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நகரத்தின் பழைய பெயரான "கர்ஜுரவஹாகா" என்பது சமசுகிருத சொல்லான கர்ஜூர் என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது "பேரீச்சை " என்பது அதன் பொருளாகும்.
விரைவான உண்மைகள் கஜுராஹோ, Country ...
கஜுராஹோ | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 24°51′00″N 79°55′30″E | |
Country | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | சத்தர்பூர் |
ஏற்றம் | 283 m (928 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 24,481 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | MP-16 |
பாலின விகிதம் | 1100 ♂/♀ |
மூடு