சகதாயி
அற்றுவிட்ட நடு ஆசிய கர்லுக் துருக்கிய மொழி / From Wikipedia, the free encyclopedia
சகதாயி (Chagatai) துருக்கிய மொழிகளுள் ஒன்றாகும். இது மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது முகலாய அரசர்களால் இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகதாயி மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.[1] அரசர்களான தைமூர், பாபர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன. சோவியத்து அமைப்பு (Soviet scholarship) இம்மொழியை பழைய உசுபெக்கு மொழி (Old Uzbek) எனக் குறிப்பிடுகிறது.[2] இம்மொழியானது பாரசீக மொழியுடனும் அரபு மொழியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.
விரைவான உண்மைகள் சகதாயி, பிராந்தியம் ...
சகதாயி | |
---|---|
جغتای Jağatāy | |
பிராந்தியம் | மத்திய ஆசியா |
ஊழி | 15 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை |
துருக்கிய மொழிகள்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | chg |
ISO 639-3 | chg |
மொழிசார் பட்டியல் | chg |
மூடு