பனிவிரிப்பு
From Wikipedia, the free encyclopedia
பனித் திணிவானது 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை விட அதிகமான பரப்பளவில் பரந்து காணப்படும்போது அது பனிவிரிப்பு (Ice sheet) என அழைக்கப்படும். 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை விடக் குறைவாக இருக்கும்போது இது பனிப்படுக்கை என அழைக்கப்படும்.[1][2][3]. பனிவிரிப்புகளில், பனியாற்றில் இருந்து பெறப்படும் பனித்திணிவே இவ்வாறு பரந்த பிரதேசத்தில் 50,000 km2 (19,000 sq mi) இற்கும் அதிகமான பரப்பளவில் காணப்படும்[4].
இறுதியாக இருந்த பனியாற்றுக் காலத்தில், இப்படியான பனிவிருப்புக்கள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, வட ஐரோப்பா போன்ற இடங்களில் காணப்பட்டது. ஆனால் தற்போது அன்டார்ட்டிகாவிலும், கிரீன்லாந்திலும் மட்டுமே பனிவிருப்புக்கள் எஞ்சியுள்ளன.
பனிவிரிப்பின் மேற்பரப்பு குளிராக இருப்பினும், அதன் அடிப்பகுதி புவிவெப்பம் காரணமாக இளம்சூட்டுடன் இருக்கும். பனி உருகும் இடங்களில், உருகியோடும் நீரானது பனிவிரிப்பில் உராய்வை நீக்குவதனால், மேலும் வேகத்துடன் உருகி ஓட ஆரம்பிக்கும். இதனால், வேகமாக ஓடும் கால்வாய்கள் தோன்றும். இவை பனியோடைகள் (Ice stream) என அழைக்கப்படும். பனித்திணிவின் தடித்த ஒரு பகுதியானது, கடலில் மிதக்குமாயின் அது பனியடுக்கு (Ice shelf) எனப்படும்.