அரியானா
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
ஹரியாணா (இந்தி : हरियाणा, பஞ்சாபி: ਹਰਿਆਣਾ, IPA: [hərɪjaːɳaː]) ஒரு வட இந்திய மாநிலம். அரியாணா என்ற சொல் (ஹரி – இந்து கடவுள்) “கடவுளின் வசிப்பிடம்” என்று பொருள்படும். அரியாணா 1966-ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. தனது எல்லைகளாக வடக்கில் பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களையும், மேற்கிலும், தெற்கிலும், ராஜஸ்தான் மாநிலத்தையும், கிழக்கில் உத்திரப் பிரதேசம் மாநிலத்தையும் கொண்டுள்ளது. அரியாணா மாநிலம், டெல்லி நகரை வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் சூழ்ந்துள்ளமையால், அரியாணாவின் சில பகுதிகள், நாட்டுத் தலைநகர் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரியாணாவின் தலைநகர் சண்டிகர் நகரம் ஆகும். அதுவே, பஞ்சாப் மாநில தலைநகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அரியாணா | |
---|---|
இந்திய வரைபடத்தில் உள்ள அரியாணா மாநிலம் | |
நாடு | இந்தியா |
பகுதி | பஞ்சாப் பகுதி |
உருவாக்கம் | 1 நவம்பர் 1966; 57 ஆண்டுகள் முன்னர் (1966-11-01)† |
தலைநகரம் | சண்டிகர்†† |
பெரிய நகரம் | பரிதாபாது |
மாவட்டம் | 21 |
அரசு | |
• ஆளுநர் | சத்யதேவ் நாராயண் ஆர்யா |
• முதலமைச்சர் | மனோகர் லால் கட்டார் (பாஜக) |
• சட்டவாக்க அவை | ஓரவை முறைமை (90 தொகுதி) |
• நாடாளுமன்றத் தொகுதிகள் | மாநிலங்களவை 5 மக்களவை (இந்தியா) 10 |
• உயர் நீதிமன்றம் | பஞ்சாப் மற்றும் அரியாணா உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 44,212 km2 (17,070 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 21-ஆவது |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,53,53,081 |
• தரவரிசை | 18-ஆவது |
• அடர்த்தி | 573/km2 (1,480/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 11 |
மொழிகள் | |
• ஆட்சி மொழி(s) | இந்தி, பஞ்சாபி[2][3] |
நேர வலயம் | ஒசநே+05:30 (IST) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-HR |
வாகனப் பதிவு | HR-xx |
HDI | 0.644 (medium) |
HDI | 17-ஆவது (2011) |
எழுத்தறிவு | 76.6% |
பாலின விகிதம் | 903 (டிசம்பர் 2015 வரை)[4] |
ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் | 66.2 |
இணையதளம் | www |
†It was carved out from the State of Punjab by the Punjab (Reorganisation) Act, 1966 ^†† Joint Capital with Punjab, India | |
சின்னங்கள் | |
மொழி | அரியாண்வி |
விலங்கு | புல்வாய் |
பறவை | Black francolin |
மலர் | தாமரை |
மரம் | அரச மரம் |
அரியாணாவில் தனிநபர் வருமானம் ரூ 29,887 என்ற அளவில் தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.[5] அரியாணா ஒரு தொழில்வளம் மிக்க மாநிலமாக வளர்ந்து வருகிறது. குர்காவன் நகரம் தகவல் தொழில்நுட்பம் வண்டி உற்பத்தியிலும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வண்டி தயாரிப்பாளரான மாருதி உத்யோக் நிறுவனம், குர்காவன் நகரத்தை தனது தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர மோட்டார் வண்டி தயாரிப்பாளரான ஹீரோ ஹோண்டா நிறுவனமும் குர்காவன் நகரத்தை தனது தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பானிபட், பஞ்சகுலா, பரிதாபாத் ஆகியனவும் முக்கிய தொழில்துறை வளர்ச்சியுற்ற நகரங்கள். பானிபட் நகரத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பாலை தெற்கு ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிது என்பது குறிப்பிடத்தக்கது.