ஈயம்(IV) ஆக்சைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
ஈயம்(IV) ஆக்சைடு (Lead(IV) oxide) என்பது PbO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈயம் டையாக்சைடு, பிளம்பிக் ஆக்சைடு[1], நீரற்ற பிளம்பிக் அமிலம் போன்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது, ஈயம் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலிருக்கும்போது இச்சேர்மம் ஓர் ஆக்சைடாகக் கருதப்படுகிறது. இதன் பிணைப்பு வகை முதன்மையாக சக பிணைப்பாக உள்ளது[2]. ஈயம்(IV) ஆக்சைடு நெடியற்று அடர் பழுப்பு நிறத்தில் படிகத் தூளாகக் காணப்படுகிறது. ஈயம்(IV) ஆக்சைடு கிட்டத்தட்ட தண்ணீரில் கரையாது. ஆல்பா நிலை, பீட்டா நிலை என்ற இரண்டு படிகநிலைகளில் ஈய(IV) ஆக்சைடு காணப்படுகிறது. ஆல்பா நிலை ஈயம்(IV) ஆக்சைடு செஞ்சாய்சதுர சீரொழுங்கில் படிகமாகிறது. முதன்முதலில் 1941 ஆம் ஆண்டு ஆல்பாநிலை ஈயம்(IV) ஆக்சைடு தொகுக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு இயற்கையில் ஓர் அரிய கனிமமாக இது சிகுரிட்டினைட்டு என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டது. நாற்கோண பீட்டா நிலை ஈயம்(IV) ஆக்சைடு முதன் முதலில் 1845 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டது. மிகப் பொதுவாகக் காணப்படும் பீட்டா நிலை பிளாட்னெரைட்டு என்ற கனிமமாக இயற்கையில் காணப்படுகிறது. பிற்காலத்தில் செயற்கை முறையிலும் தயாரிக்கப்பட்டது. ஈயம்(IV) ஆக்சைடு ஒரு வலிமையான ஆக்சிசனேற்ற முகவராகும். தீக்குச்சிகள், வானவெடிகள், சாயங்கள் மற்றும் பிற வேதிப்பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மின் வேதியியல் துறையிலும் ஈயம்(IV) ஆக்சைடு பல முக்கியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஈய-அமில மின்கலன்களில் நேர்மின் முனையாக ஈயம்(IV) ஆக்சைடு பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈயம்(IV) ஆக்சைடு | |
வேறு பெயர்கள்
பிளம்பிக் ஆக்சைடு பிளாட்டெர்னைட்டு | |
இனங்காட்டிகள் | |
1309-60-0 Y | |
ChemSpider | 14109 11421764 |
பப்கெம் | 14793 |
வே.ந.வி.ப எண் | OGO700000 |
UN number | 1872 |
பண்புகள் | |
PbO2 | |
வாய்ப்பாட்டு எடை | 239.1988 கி/மோல் |
தோற்றம் | அடர் பழுப்பு, கருப்பு தூள் |
அடர்த்தி | 9.38 கி/செ.மீ3 |
உருகுநிலை | 290 °C (554 °F; 563 K) சிதைவடையும் |
கரையாது | |
கரைதிறன் | அசிட்டிக் அமிலத்தில் கரையும் எத்தனாலில் கரையாது. |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
ஈயூ வகைப்பாடு | Repr. Cat. 1/3 T+ (T+) Xn (Xn) N (N) |
R-சொற்றொடர்கள் | R61, R20/22, R33, R62, R50/53 |
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | கார்பன் டை ஆக்சைடு சிலிக்கன் டையாக்சைடு செருமேனியம் டையாக்சைடு வெள்ளீய டையாக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |