கால்சியம் ஆக்சலேட்டு
From Wikipedia, the free encyclopedia
கால்சியம் ஆக்சலேட்டு (Calcium oxalate) என்பது CaC2O4•(H2O)x, என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். இங்கு x இன் மதிப்பு 0 முதல் 3 வரை மாறுபடுகிறது. தொன்மையான பயன்பாட்டில் இதை சுண்ணாம்பு ஆக்சலேட்டு என்ற பெயரில் அழைத்தார்கள். ஆக்சலேட்டின் கால்சியம் உப்பே கால்சியம் ஆக்சலேட்டு என்றும் கருதப்படுகிறது. அனைத்து வடிவங்களும் நிறமற்றவையாக அல்லது வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. ஒற்றை நீரேற்று வடிவ கால்சியம் ஆக்சலேட்டு இயற்கையில் வீவெல்லைட்டு என்ற கனிமமாக உறை வடிவ படிகங்களாகத் தோன்றுகிறது. தாவரங்களில் இது ரேபைடுகள் என்ற ஊசிவடிவத்திலுள்ள படிகங்களாக அறியப்படுகிறது. அரிய வகை இருநீரேற்று வடிவம் வெட்டெல்லைட்டு என்ற கனிம்மாகவும் முந்நீரேற்று வடிவம் காவாக்சைடு என்ற கனிமமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கால்சியம் ஆக்சலேட்டுகள் மனித சிறுநீரக கற்களின் முக்கிய அங்கமாகும். இதேபோல கால்சியம் ஆக்சலேட்டு மதுவகையான பியரிலும் பியர் கல்லாக அம்மதுபானம் பயன்படுத்தப்படும் கொள்கலன்களில் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் ஆக்சலேட்டு | |
இனங்காட்டிகள் | |
5794-28-5 (ஒற்றைநீரேற்று) Y 25454-23-3 (இருநீரேற்று) N 192389-49-4 (முந்நீரேற்று) | |
ChEBI | CHEBI:60579 Y |
ChemSpider | 30549 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16212978 |
| |
பண்புகள் | |
CaC2H2O5 (ஒற்றைநீரேற்று) CaC2O4 (நீரிலி) | |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 2.20 g/cm3, ஒற்றைநீரேற்று[1] |
உருகுநிலை | 200 °C (392 °F; 473 K) சிதைவடையும் (ஒற்றைநீரேற்று) |
0.67 மி.கி/லி (20 °செ) | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீங்கானது எரிச்சலூட்டும் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கால்சியம் கார்பனேட்டு கால்சியம் அசிட்டேட்டு கால்சியம் பார்மேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் ஆக்சலேட்டு பெரிலியம் ஆக்சலேட்டு மக்னீசியம் ஆக்சலேட்டு இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு பேரியம் ஆக்சலேட்டு ரேடியம் ஆக்சலேட்டு இரும்பு(II) ஆக்சலேட்டு பெரிக் ஆக்சலேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |