மெத்தனால்
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
மெத்தனால் (Methanol) என்பது CH3OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மமாகும். மெத்தில் ஆல்ககால், மரச்சாராயம், மர நாப்தா, கார்பினால், என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். ஒரு மெத்தில் குழு ஐதராக்சில் குழுவுடன் இணைக்கப்பட்டிருந்தால் அதை மெத்தனால் எனலாம். MeOH என்ற சுருக்கக் குறியீடாகவும் இதை எழுதுகிறார்கள். ஒரு காலத்தில் மரத்தைச் சிதைத்து வாலைவடித்தல் முறையில் மெத்தனால் தயாரிக்கப்பட்டதால் இது மரச்சாராயம் என்ற பெயரைப் பெற்றது. இப்போதெல்லாம் மெத்தனால் பெருமளவில் கார்பனோராக்சைடை ஐதரசனேற்றம் செய்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது[1].
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தனால் | |||
வேறு பெயர்கள்
ஐதராக்சிமெத்தேன் (hydroxymethane) மெத்தில் ஆல்க்கஃகால் (methyl alcohol) மெத்தில் ஐதரேட்டு (methyl hydrate) மரச் சாராயம் (wood alcohol) கார்பினால் | |||
இனங்காட்டிகள் | |||
67-56-1 N | |||
ChemSpider | 864 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
வே.ந.வி.ப எண் | PC1400000 | ||
| |||
பண்புகள் | |||
CH3OH | |||
வாய்ப்பாட்டு எடை | 32.05 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.7918 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | –97 °C, -142.9 °F (176 K) | ||
கொதிநிலை | 64.7 °C, 148.4 °F (337.8 K) | ||
கலக்கக்கூடியது | |||
காடித்தன்மை எண் (pKa) | ~ 15.5 | ||
பிசுக்குமை | 0.59 mPa•s at 20 °C | ||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.69 D (gas) | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | தீபற்றக்கூடியது (F) நச்சுத்தன்மை (T) | ||
R-சொற்றொடர்கள் | R11, R23/24/25, R39/23/24/25 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2), S7, S16, S36/37, S45 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 11 °C | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஆல்க்கஃகால்கள் தொடர்புடையவை |
எத்தனால் புரொப்பொனால் பியூட்டனால் | ||
தொடர்புடைய சேர்மங்கள் | குளோரோமெத்தேன் மெத்தாக்சிமெத்தேன் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மெத்தனால் என்பது ஓர் எளிய ஆல்ககால் ஆகும். இதன் வாய்ப்பாட்டில் ஒரு மெத்தில் குழுவுடன் ஓர் ஐதராக்சில் குழு இணைக்கப்பட்டுள்ளது. எளிதில் ஆவியாகக்கூடிய, எளிதில் தீப்பற்றக்கூடிய இந்த நீர்மம் நிறமற்றும் இலேசானதாகவும் காணப்படுகிறது. குடிக்கும் மதுவான எத்தனாலைப் போல தனித்துவமான மணத்தைப் பெற்றுள்ளது[2]. இருந்தாலும் இது எத்தனாலைக் காட்டிலும் நச்சுத்தன்மை அதிகம் கொண்டது ஆகும். அறை வெப்பநிலையில் மெத்தனால் ஒரு முனைவுற்ற திரவம் ஆகும். ஆண்டுதோறும் 20 மில்லியன் டன்களுக்கு அதிகமாக மெத்தனால் தயாரிக்கப்படுகிறது. இது பார்மால்டிகைடு, அசிட்டிக் அமிலம், மெத்தில்-டெர்ட்-பியூட்டைல் ஈதர் உள்ளிட்ட மற்ற வேதிப் பொருட்கள் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடி வேதிச் சேர்மமாக உள்ளது.