இண்டியம்
From Wikipedia, the free encyclopedia
இண்டியம் (Indium) என்பது In என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். அணு எண் 49 கொண்ட இத்தனிமத்தை பின் இடைநிலைத் தனிமம் என்று வகைப் படுத்துகிறார்கள். புவி மேலோட்டில் மில்லியனுக்கு 0.21 பகுதிகள் இண்டியம் தனிமம் காணப்படுகிறது. மிகவும் மென்மையான இத்தனிமத்தை தேவைக்கேற்றார் போல உருவத்தை மாற்றிக் கொள்ள இயலும். சோடியம் மற்றும் காலியம் தனிமங்களைக் காட்டிலும் இண்டியத்தின் உருகுநிலை அதிகமாகும். ஆனால் இலித்தியம் மற்றும் வெள்ளீயம் தனிமங்களைக் காட்டிலும் குறைவான உருகுநிலை கொண்டதாகும். வேதியியல் ரீதியாக இண்டியமானது காலியம் மற்றும் தாலியத்தை ஒத்திருக்கிறது. பெரும்பாலும் இவ்விரண்டு தனிமங்களுக்கு இடையிலான பண்புகளை இண்டியம் வெளிப்படுத்துகிறது[1]. 1863 ஆம் ஆண்டு பெர்டினாண்டு ரெயிச் மற்றும் இயரோனிமசு தியோடர் ரிக்டர் நிறமாலையியல் செயல் முறைகள் மூலம் இண்டியத்தைக் கண்டறிந்தனர். நிறமாலையின் கருநீல வரிகளில் இத்தனிமம் தென்பட்டதால் இதற்கு இண்டியம் எனப்பெயரிடப்பட்டது. 1864 ஆம் ஆண்டில் இண்டியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டது.
| |||||||||||||||||||
பொது | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
இண்டியம், In, 49 | ||||||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை | குறை மாழைகள் | ||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
13, 5, p | ||||||||||||||||||
தோற்றம் | siபளபளப்பான வெண் சாம்பல் | ||||||||||||||||||
அணு நிறை (அணுத்திணிவு) | 114.818(3) g/mol | ||||||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு | [Kr] 4d10 5s2 5p1 | ||||||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) | 2, 8, 18, 18, 3 | ||||||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||
இயல் நிலை | திண்மம் | ||||||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | 7.31 கி/செ.மி³ | ||||||||||||||||||
உருகுநிலையில் நீர்மத்தின் அடர்த்தி | 7.02 g/cm³ | ||||||||||||||||||
உருகு வெப்பநிலை | 429.75 K (156.60 °C, 313.88 °F) | ||||||||||||||||||
கொதி நிலை | 2345 K (2072 °C, 3762 °F) | ||||||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் | 3.281 கி.ஜூ/மோல் (kJ/mol) | ||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் | 231.8 கி.ஜூ/மோல் | ||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (25 °C) 26.74 ஜூ/(மோல்·K) J/(mol·K) | ||||||||||||||||||
| |||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||
படிக அமைப்பு | tetragonal | ||||||||||||||||||
ஆக்சைடு நிலைகள் | 3 (இருதன்மை ஆக்ஸைடு) | ||||||||||||||||||
எதிர்மின்னியீர்ப்பு | 1.78 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 558.3 kJ/(mol | ||||||||||||||||||
2nd: 1820.7 kJ/mol | |||||||||||||||||||
3rd: 2704 kJ/mol | |||||||||||||||||||
அணு ஆரம் | 155 பிமீ | ||||||||||||||||||
அணுவின் ஆரம் (கணித்) | 156 pm | ||||||||||||||||||
கூட்டிணைப்பு ஆரம் | 144 pm | ||||||||||||||||||
வான் டெர் வால் ஆரம் | 193 பி.மீ (pm) | ||||||||||||||||||
வேறு பல பண்புகள் | |||||||||||||||||||
காந்த வகை | தரவு இல்லை | ||||||||||||||||||
மின் தடைமை | (20 °C) 83.7 nΩ·m | ||||||||||||||||||
வெப்பக் கடத்துமை | (300 K) 81.8 வாட்/(மீ·கெ) W/(m·K) | ||||||||||||||||||
வெப்ப நீட்சி | (25 °C) 32.1 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K) | ||||||||||||||||||
ஒலியின் விரைவு (மெல்லிய கம்பி வடிவில்) | (20 °C) 1215 மீ/நொடி | ||||||||||||||||||
யங்கின் மட்டு | 11 GPa | ||||||||||||||||||
மோவின்(Moh's) உறுதி எண் | 1.2 | ||||||||||||||||||
பிரிநெல் உறுதிஎண் Brinell hardness]] | 8.83 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||||||
CAS பதிவெண் | 7440-74-6 | ||||||||||||||||||
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
மேற்கோள்கள் |
துத்தநாக சல்பைடு தாதுவில் இண்டியம் சிறிதளவு காணப்படுகிறது. துத்தநாகத்தை தூய்மைப்படுத்தும் செயல் முறையில் ஒரு உடன் விளைபொருளாக இண்டியம் கிடைக்கிறது. குறைக்கடத்தி தொழிற்சாலைகளில் இத்தனிமத்தை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக பற்றாசு போன்ற தாழ் உருகுநிலை கொண்ட கலப்பு உலோகங்களில் இண்டியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உயர் வெற்றிட முத்திரைகள், கண்ணாடிகள் மீது பூசப்பயன்படுத்தும் இண்டியம்வெள்ளீய ஆக்சைடு உற்பத்திக்கு இண்டியம் பயன்படுகிறது. இரத்த ஓட்டத்தில் இண்டியம் சேர்மங்களைச் செலுத்தினாலும் அவை சிறிதலவு மட்டுமே நச்சுத்தன்மையைக் காட்டுகிறது மற்றும் எந்தவிதமான உயிர்னச் செயல்பாடுகளிலும் இது பங்கேற்பதில்லை. சுவாசம், ஈர்ப்பு முறைகளால் இண்டியம் உடலுக்குள் செல்வதில்லை. உட்செலுத்துதல் மூலம் மட்டுமே இவை உடலுக்குள் செல்கின்றன.