![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/Na_%2528Sodium%2529.jpg/640px-Na_%2528Sodium%2529.jpg&w=640&q=50)
சோடியம்
அணு எண் 11 கொண்ட தனிமம் / From Wikipedia, the free encyclopedia
சோடியம் ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Na. இதன் அணு எண் 11. இது மென்மையான, வெண்ணிறமான தனிமம் ஆகும். சோடியம் மிகுந்த வினைத்திறன் கொண்ட தனிமம். இது காற்றில் விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது. எனவே இதைத் தடுக்க மந்தமான சூழலில் குறிப்பாக மண்ணெய்க்குள் வைக்கப் படுகிறது. சோடியம் கடலில் சோடியம் குளோரைடு என்னும் சேர்மமாக அதிக அளவில் கிடைக்கிறது. இது விலங்கினங்களுக்குத் தேவையான ஒரு முக்கியக் கனிமம் ஆகும். பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கக் கூடிய தனிமங்களுள் ஆக்சிஜன், சிலிகான், அலுமினியம், இரும்பு, கால்சியத்திற்கு அடுத்து சோடியம் ஆறாவது செழுமை மிக்க தனிமமாக உள்ளது.[2] நிறையின் அடிப்படையில் 2.83 விழுக்காடு சோடியமாகும். இயற்கையில் சோடியம் ஒருபோதும் தனித்துக் காணப்படுவதில்லை. உப்புக்களாகவே கிடைக்கின்றது. உப்புப் பாறையாகப் பூமியில் பல இடங்களில் கிடைக்கிறது. பல உப்பு நீர் ஏரிகளிலும், சுனை, ஊற்றுக்களிலும் கூடச் சோடியம் குளோரைடு மிகுதியாகக் கரைந்திருக்கிறது.
சோடியம் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
11Na | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||||||
வெள்ளி போன்ற வெள்ளை உலோகம்![]() ![]() சோடியத்தின் நிறமாலைக்கோடுகள் | |||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | சோடியம், Na, 11 | ||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈsoʊdiəm/ SOH-dee-əm | ||||||||||||||||||||||||||||
தனிம வகை | கார உலோகம் | ||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 1, 3, s | ||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
22.98976928(2) | ||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Ne] 3s1 2,8,1 | ||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | H. Davy (1807) | ||||||||||||||||||||||||||||
முதற்தடவையாகத் தனிமைப்படுத்தியவர் |
H. Davy (1807) | ||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 0.968 g·cm−3 | ||||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 0.927 g·cm−3 | ||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 370.87 K, 97.72 °C, 207.9 °F | ||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 1156 K, 883 °C, 1621 °F | ||||||||||||||||||||||||||||
மாறுநிலை | (extrapolated) 2573 K, 35 MPa | ||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 2.60 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 97.42 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 28.230 யூல்.மோல்−1·K−1 | ||||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | +1, -1 (வலிமையான கார ஒக்சைட்டு) | ||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 0.93 (பாலிங் அளவையில்) | ||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 495.8 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||
2வது: 4562 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||
3வது: 6910.3 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 186 பிமீ | ||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 166±9 pm | ||||||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 227 பிமீ | ||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | body-centered cubic | ||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | paramagnetic | ||||||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (20 °C) 47.7 nΩ·m | ||||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 142 W·m−1·K−1 | ||||||||||||||||||||||||||||
வெப்ப விரிவு | (25 °C) 71 µm·m−1·K−1 | ||||||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) | (20 °C) 3200 மீ.செ−1 | ||||||||||||||||||||||||||||
யங் தகைமை | 10 GPa | ||||||||||||||||||||||||||||
நழுவு தகைமை | 3.3 GPa | ||||||||||||||||||||||||||||
பரும தகைமை | 6.3 GPa | ||||||||||||||||||||||||||||
மோவின் கெட்டிமை (Mohs hardness) |
0.5 | ||||||||||||||||||||||||||||
பிரிநெல் கெட்டிமை | 0.69 MPa | ||||||||||||||||||||||||||||
CAS எண் | 7440-23-5 | ||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: சோடியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
·சா |