குளோரின்
From Wikipedia, the free encyclopedia
குளோரின் (Chlorine) என்பது Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் அணு எண் 17ஐயும் கொண்ட ஓரு தனிம வேதிப் பொருள் ஆகும். இது ஒரு ஆலசன் வகை தனிமமாகும், ஆவர்த்தன அட்டவணையில் நெடுங்குழு 17 இல் (முன்னர் VIIa அல்லது VIIb) அடக்கப்பட்டுள்ளது. குளோரின் இயற்கையில் தனித்துக் காணப்படுவதில்லை. ஆனால் பெருமளவு குளோரைடு உப்புக்களாக உறைந்துள்ளது. பாறை உப்புக்களிலும் கடல் நீரிலும் சோடியம் குளோரைடு பெருமளவு உள்ளது.[3]
குளோரின் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
17Cl | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||||||||||||||
வெளிர் மஞ்சள்-பச்சை வளிமம் | ||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | குளோரின், Cl, 17 | |||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈklɔːriːn/ KLOR-een | |||||||||||||||||||||||||||
தனிம வகை | ஆலசன் | |||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 17, 3, p | |||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
35.453(2) | |||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Ne] 3s2 3p5 2, 8, 7 | |||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
நிலை | வளிமம் | |||||||||||||||||||||||||||
அடர்த்தி | (0 °C, 101.325 kPa) 3.2 g/L | |||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி கொ.நி.யில் | 1.5625[1] g·cm−3 | |||||||||||||||||||||||||||
உருகுநிலை | 171.6 K, -101.5 °C, -150.7 °F | |||||||||||||||||||||||||||
கொதிநிலை | 239.11 K, -34.04 °C, -29.27 °F | |||||||||||||||||||||||||||
மாறுநிலை | 416.9 K, 7.991 MPa | |||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | (Cl2) 6.406 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | (Cl2) 20.41 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (Cl2) 33.949 யூல்.மோல்−1·K−1 | |||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 7, 6, 5, 4, 3, 2, 1, -1 (வலிமையான காடிய ஒக்சைட்டு) | |||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 3.16 (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 1251.2 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||
2வது: 2298 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||
3வது: 3822 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 102±4 pm | |||||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 175 பிமீ | |||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | orthorhombic | |||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | diamagnetic[2] | |||||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (20 °C) > 10 Ω·m | |||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 8.9×10-3 W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் | (வளிமம், 0 °C) 206 மீ.செ−1]] | |||||||||||||||||||||||||||
CAS எண் | 7782-50-5 | |||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: குளோரின் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
·சா |
சுவீடன் நாட்டு விஞ்ஞானியான காரல் வில்ஹெம் ஷீலே(Carl Wilhelm Scheele) 1774 ஆம் ஆண்டில் பைரோலுசைட் என்ற கனிமத்தை ஆராய்ந்த போது குளோரினைக் கண்டுபிடித்தார்.[4] ஆனால் அப்போது இது தவறுதலாக ஆக்சிஜன் சேர்ந்த ஒரு சேர்மம் என இனமறியப்பட்டது.[5][6] 1810 ல் சர் ஹம்பிரி டேவி இந்த வளிமத்தின் தனித் தன்மையை நிறுவினார்.[4] இதற்கு குளோரின் என்று பெயர் சூட்டியவரும் இவரே. கிரேக்க மொழியில் 'குளோரோஸ்' என்றால் 'மஞ்சள் கலந்த பசுமை நிறமுடைய' என்று பொருள்.[7]