கதலின் கரிக்கோ
From Wikipedia, the free encyclopedia
கதலின் கரிக்கோ (Katalin Karikó, அங்கேரியம்: Karikó Katalin; பிறப்பு: 17 சனவரி 1955) என்பவர் அங்கேரிய-அமெரிக்க உயிர்வேதியியல் நிபுணர் ஆவார். இவர் இரைபோ கருவமிலம் சார்ந்த பொறிமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.[1] புரத சிகிச்சைகளுக்கான செயற்கைக் கல முறை - தூதாறனை மற்றும் ஆர். என். ஏ. படியெடுப்பு ஆய்விற்காக அறியப்படுகிறார். இவர் 2006 முதல் 2013 வரை ஆர்.என். ஏ. ஆரெக்சு (RNARx)-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராக இருந்தார்.[2]
கதலின் கரிக்கோ Katalin Karikó | |
---|---|
கரிக்கோ 2021-ல் | |
பிறப்பு | 17 சனவரி 1955 (1955-01-17) (அகவை 69) சூல்னாக், அங்கேரி |
தேசியம் |
|
துறை | உயிர்வேதியியல்; இரைபோ கருவமில நுட்பம் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | சுஜெட் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நோயெதிர்ப்பாற்றலில் தூதறனை பங்கு மற்றும் சிகிச்சைகள் |
விருதுகள் |
|
துணைவர் | பெலா பிரான்சியா |
பிள்ளைகள் | சுசன் பிரான்சியா |
2013ஆம் ஆண்டு முதல், இவர் பயோஎன்டெக் (BioNTech) ஆர்.என்.ஏ. மருந்தகங்களுடன் தொடர்புடையவர். இந்நிறுவனத்தில் முதலில் துணைத் தலைவராகவும், பின்னர் 2019-ல் மூத்த துணைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார்.[3] இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் உள்ளார்.[2] செட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.[4]
கரிக்கோவின் ஆய்வுப் பணியில் ஆர்என்ஏ-தொடர்புடைய நோயெதிர்ப்பு செயல்பாடு அடங்கும். இதன் விளைவாக அமெரிக்க நோயெதிர்ப்பு நிபுணர் இட்ரூ வெய்ஸ்மேனுடன் இணைந்து இரைபோ கருவமில நோயெதிர்ப்பு சக்தியை அடக்கும் நியூக்ளியோசைடு மாற்றங்களை கண்டுபிடித்தார்.[5][6][7] இது தூதாறனையின்சிகிச்சை பயன்பாட்டிற்கு மேலும் பங்களித்ததாகக் கருதப்படுகிறது.[8] வைஸ்மேனுடன் சேர்ந்து, நோயெதிர்ப்பு சக்தியற்ற, நியூக்ளியோசைட் மாற்றியமைக்கப்பட்ட ஆர்என்ஏவைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்க காப்புரிமையைப் பெற்றுள்ளார். இந்த தொழில்நுட்பம் பயோஎன்டெக் மற்றும் மாடர்னாவால், இவர்களின் புரத மாற்று தொழில்நுட்பங்களை உருவாக்க உரிமம் பெற்றுள்ளது. ஆனால் இவர்களின் ஆய்வு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.[9]
தூதாறனை தொடர்பான பணிக்காக, கரிக்கோ மற்றும் வெய்சுமேன் ஆகியோர் 2023 மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, லாஸ்கர்-டெபக்கி மருத்துவ மருத்துவ ஆராய்ச்சி விருது, டைம் பத்திரிகையின் 2021ஆம் ஆண்டின் ஹீரோ மற்றும் 2022ஆம் ஆண்டில் உயிர் மருந்து அறிவியலில் தாங் பரிசு விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றனர்.