குரோவாசியா
From Wikipedia, the free encyclopedia
குரோவாசியா (Croatia, குரோவாசியம்: Hrvatska [xř̩ʋaːtskaː], குரோவாத்ஸ்க்கா, ஹரவாத்ஸ்க்கா), முறைப்படி குரோவாசியக் குடியரசு (Republika Hrvatska ஒலிப்புⓘ), என்று அழைக்கப்படும் நாடு நடு ஐரோப்பாவும் நடுநிலக் கடல் பகுதியும், பால்க்கனும் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறு நாடு. இந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 4,493,312 மக்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டின் தலைநகரம் சாகிரேப் ஆகும். 2001 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின் படி 779,145 மக்கள் இந்த பெரிய நகரத்தில் வாழ்கிறார்கள். குரோவாட்ஸ்க்காவின் வடக்கே சிலொவேனியா நாடும் அங்கேரியும் உள்ளன. கிழக்கே செர்பியா உள்ளது. தெற்கிலும் மேற்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும் பாஸ்னியா-ஹெர்ட்சேகோவினா உள்ளது. ஏட்ரியாட்டிக் கடல் மேற்கிலும், சற்று தள்ளி தெற்கே மாண்ட்டெனெக்ரோவும் உள்ளது. குரோவாட்ஸ்க்கா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய இருக்கும் உறுப்புநாடுகளில் ஒன்றாகும்.
குரோவாசியக் குடியரசு Republic of Croatia Republika Hrvatska | |
---|---|
நாட்டுப்பண்: "Lijepa naša domovino" ("நமது அழகிய தாய்நாடு") | |
தலைநகரம் | சாகிரேப் 45°48′N 16°0′E |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | குரோவாசியம் |
எழுத்து முறை | இலத்தீன் |
இனக் குழுகள் (2011[1]) |
|
சமயம் (2011) |
|
மக்கள் |
|
அரசாங்கம் | ஒருமுக நாடாளுமன்றக் குடியரசு |
• அரசுத்தலைவர் | கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் |
• பிரதமர் | அந்திரேய் பிளெங்கோவிச் |
சட்டமன்றம் | சபோர் |
நிறுவுதல் | |
• குரோவாசியக் குடியேற்றம் | 6-ம் நூற்றாண்டு[2][3][4] |
• குறுநிலம் | 7-ஆம் நூற்றாண்டு |
• இராச்சியம் | 925 |
• அங்கேரியுடனான ஒன்றியம் | 1102 |
• அப்ஸ்பூர்க் இராச்சியத்துடன் இணைவு | 1 சனவரி 1527 |
29 அக்டோபர் 1918 | |
• யுகோசுலாவியா அமைப்பு | 4 டிசம்பர் 1918 |
• விடுதலைக்கான முடிவு | 25 சூன் 1991 |
• ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | 1 சூலை 2013 |
பரப்பு | |
• மொத்தம் | 56,594 km2 (21,851 sq mi) (124வது) |
• நீர் (%) | 1.09 |
மக்கள் தொகை | |
• 2017 மதிப்பிடு | 4,154,200[5] (129வது) |
• 2011 கணக்கெடுப்பு | 4,284,889[6] (128வது) |
• அடர்த்தி | 75.8/km2 (196.3/sq mi) (126வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2018 மதிப்பீடு |
• மொத்தம் | $106.548 பில்லியன்[7] (84வது) |
• தலைவிகிதம் | $25,807[7] (56வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2018 மதிப்பீடு |
• மொத்தம் | $61.056 billion[7] (81வது) |
• தலைவிகிதம் | $14,788[7] (57வது) |
ஜினி (2018) | 29.7[8] தாழ் · 17வது |
மமேசு (2015) | 0.827[9] அதியுயர் · 45வது |
நாணயம் | குனா (HRK) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (மஐநே) |
ஒ.அ.நே+2 (மஐகோநே) | |
திகதி அமைப்பு | dd.mm.yyyy (பொஊ) |
வாகனம் செலுத்தல் | valathu |
அழைப்புக்குறி | +385 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | HR |
இணையக் குறி |
|
2013 சூலை 1-ம் தேதி குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது.[10]