செவ்வாய் (கோள்)
ஞாயிற்றுக் குடும்பத்தில் ஞாயிறிலிருந்து நான்காவது கோள் / From Wikipedia, the free encyclopedia
செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது.இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது.[10] இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு புவிசார் கோளான இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன.
2003 ஆம் ஆண்டில் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியால் படம் பிடிக்கப்பட்ட செவ்வாய் கிரகம் |
||||||||||
காலகட்டம்J2000 | ||||||||||
சூரிய சேய்மை நிலை | 1.6660 AU 249.2 Gm |
|||||||||
சூரிய அண்மை நிலை | 1.3814 AU 206.7 Gm |
|||||||||
அரைப்பேரச்சு | 1.523679 AU 227.9392 Gm |
|||||||||
மையத்தொலைத்தகவு | 0.0934 | |||||||||
சுற்றுப்பாதை வேகம் | 1.8808 Julian years 686.971 d 668.5991 sols |
|||||||||
சூரியவழிச் சுற்றுக்காலம் | 779.96 days 2.135 Julian years |
|||||||||
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 24.077 km/s | |||||||||
சராசரி பிறழ்வு | 19.373° | |||||||||
சாய்வு | 1.850° to ecliptic 5.65° to ஞாயிறு (விண்மீன்)'s நிலநடுக் கோடு 1.67° to invariable plane |
|||||||||
Longitude of ascending node | 49.558° | |||||||||
Argument of perihelion | 286.502° | |||||||||
துணைக்கோள்கள் | 2 | |||||||||
சிறப்பியல்பு
| ||||||||||
சராசரி ஆரம் | 3,389.5±0.2 km[lower-alpha 1] [2] | |||||||||
நிலநடுக்கோட்டு ஆரம் | 3,396.2±0.1 km[lower-alpha 1] [2] 0.533 Earths |
|||||||||
துருவ ஆரம் | 3,376.2±0.1 km[lower-alpha 1] [2] 0.531 Earths |
|||||||||
தட்டையாதல் | 0.00589±0.00015 | |||||||||
புறப் பரப்பு | 144,798,500 km2 0.284 Earths |
|||||||||
கனஅளவு | 1.6318×1011 km3[3] 0.151 Earths |
|||||||||
நிறை | 6.4171×1023 kg[4] 0.107 Earths |
|||||||||
அடர்த்தி | 3.9335±0.0004 g/cm³[3] | |||||||||
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 3.711 m/s²[3] 0.376 g |
|||||||||
விடுபடு திசைவேகம் | 5.027 km/s | |||||||||
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் | 1.025957 d 24h 37m 22s[3] |
|||||||||
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் | 868.22 km/h (241.17 m/s) | |||||||||
அச்சுவழிச் சாய்வு | 25.19° to its orbital plane[5] | |||||||||
வடதுருவ வலப்பக்க ஏற்றம் | 21h 10m 44s 317.68143° |
|||||||||
வடதுருவ இறக்கம் | 52.88650° | |||||||||
எதிரொளி திறன் | 0.170 (geometric)[6] 0.25 (Bond)[5] |
|||||||||
மேற்பரப்பு வெப்பநிலை கெல்வின் Celsius |
| |||||||||
தோற்ற ஒளிர்மை | +1.6 to −3.0[8] | |||||||||
கோணவிட்டம் | 3.5–25.1″[5] | |||||||||
பெயரெச்சங்கள் | Martian | |||||||||
பரப்பு அழுத்தம் | 0.636 (0.4–0.87) kPa | |||||||||
வளிமண்டல இயைபு |
|
1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக மரினர் 4 வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர். கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன. இவை கடல்களும், கண்டங்களுமாக இருக்கலாம் என எண்ணினர். மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் என விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.[11]
இது, போபோசு, டெய்மோசு என்னும் இரண்டு நிலவுகளைக் கொண்டுள்ளது. இவை சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. செவ்வாயின் டிரோசான் சிறுகோளான 5261 யுரேக்காவைப்போல் இவை செவ்வாயின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறுகோள்களாக இருக்கலாம்.