கார்பனீராக்சைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
கார்பனீராக்சைடு (carbon dioxide) என்பது CO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு நிறமற்ற வாயுவாகும். காபனீரொக்சைட்டு, கார்பன்-டை-ஆக்சைடு, கரியமிலவாயு என்று பல்வேறு பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். கார்பனீராக்சைடு உலர் காற்றைக் காட்டிலும் 60% அடர்த்தி மிகுந்ததாகும். ஒரு கார்பன் அணு இரண்டு ஆக்சிசன் அணுக்களுடன் சகப்பிணைப்பு மூலம் இரட்டைப் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டு கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறு உருவாகிறது. நடைமுறையில் இவ்வாயு புவியின் வளிமண்டலத்தில் 0.04 சதவீதம் என்ற குறைந்த சுவடு அளவில் உள்ளது. கன அளவில் இந்த அளவு மில்லியனுக்கு 410 பகுதிகள் ஆகும். தொழிற்புரட்சிக்கு முன்னால் இந்த அளவு மில்லியனுக்கு 280 பகுதிகள் மட்டுமே இருந்தது. எரிமலைகள், சூடான நீரூற்றுகள், வெந்நீர் உற்றுகள் போன்றவை கார்பனீராக்சைடின் இயற்கை மூலங்களில் சிலவாகும். நீர் மற்றும் அமிலங்களின் செயல்பாடுகளால் கார்பனேட்டு பாறைகளில் இருந்து இது விடுவிக்கப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு தண்ணீரில் கரையக்கூடியதாக இருப்பதால், அது நிலத்தடி நீரில், ஆறுகள் மற்றும் ஏரிகள், பனிக்கட்டி, பனிப்பாறைகள் மற்றும் கடல்நீர் ஆகியவற்றில் இயல்பாகவே கலந்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிலும் கார்பன் டை ஆக்சைடு கலந்துள்ளது. சாதாரணமாகக் காணக்கூடிய அடர்த்தி நிலைகளில் இது நெடியற்றுக் காணப்படுகிறது. இருப்பினும், அதிகமான செறிவுகளில் கூர்மையான அமிலத் தன்மையான நெடியைக் கொண்டதாக உள்ளது [1].
கார்பனீராக்சைடு கார்பன்-டை-ஆக்சைடு | |
---|---|
வேறு பெயர் | கார்போனிக் அமில வளிமம், carbonic anhydride, உலர் பனிக்கட்டி(திண்மம்) |
வேதியியல் குறியீடு | CO2 |
மோலார் திணிவு | 44.0095(14) கி/மோல் |
திண்ம நிலை | உலர் பனிக்கட்டி, கார்போனியா |
தோற்றம் | நிறமற்ற வளிமம் |
சிஏஎசு எண் | [124-38-9] |
இயல்புகள் | |
அடர்த்தியும் நிலையும் | 1600 கிகி/மீ³, திண்மம் approx. 1.98 கிகி/மீ³, gas at STP |
நீரில் கரைதன்மை | 1.45 கிகி/மீ³ |
பதங்கமாதலின் மறைவெப்பம் | 25.13 கிஜூ/மோல் |
உருகுநிலை | −57 °C (216 K), அமுக்கத்தில் |
கொதிநிலை | −78 °C (195 K), பதங்கமாதல் |
அமிலத்தன்மை (pKa) | 6.35 உம் 10.33 உம் |
பாகுநிலை | 0.07 cP at −78 °C |
அமைப்பு | |
மூலக்கூற்று வடிவம் | linear |
பளிங்கு அமைப்பு | குவாட்ஸ்-போல |
இருமுனைவுத் திருப்பம் | பூச்சியம் |
ஆபத்துக்கள் | |
MSDS | External MSDS |
Main ஆபத்துக்கள் | asphyxiant, irritant |
என்.எப்.பி.ஏ 704 | (நீர்மம்) |
R-சொற்றொடர்கள் | R: As, Fb |
S-சொற்றொடர்கள் | S9, S23, S36(நீர்மம்) |
வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு எண் | FF6400000 |
துணைத் தரவுப் பக்கம் | |
அமைப்பும் இயல்புகளும் | n, εr, etc. |
Spectral data | UV, IR, NMR, MS |
தொடர்பான சேர்வைகள் | |
தொடர்புடைய ஒட்சைட்டுக்கள் |
கார்பன் மோனாக்சைடு கார்பன் கீழாக்சைடு இருகாபன் ஓரொட்சைட்டு காபன் மூவொட்சைட்டு |
Except where noted otherwise, data are given for materials in their standard state (at 25 °C, 100 kPa) Infobox disclaimer and references | |
கார்பன் டை ஆக்சைடுக்கு கார்பன் சுழற்சியில் கிடைக்கக்கூடிய கார்பன் ஆதாரமாக இருக்கின்றது. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு பூமியிலுள்ள உயிர்களுக்கான முதன்மை கார்பன் ஆதாரமாக இருக்கிறது. தொழிற்புரட்சிக்கு முன்னர் வளிமண்டலத்தில் இருந்த கார்பன்-டை-ஆக்சைடின் அடர்த்தி உயிரினங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் புவியியல் நிகழ்வுகள் மூலம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. தாவரங்கள், பாசிகள் மற்றும் சயனோபாக்டீரியாக்கள் ஒளி ஆற்றலின் உதவியோடு கார்பன் டை ஆக்சைடு, நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை முறையில் உணவு தயாரிக்கின்றன. இவை இவ்வினையின் கழிவுப் பொருளாக ஆக்சிசனை வெளிவிடுகின்றன [2].
காற்றைச் சுவாசித்து வாழ்கின்ற அனைத்து உயிரினங்களும் கார்பன் டை ஆக்சைடை வெளிவிடுகின்றன. கார்போவைதரேட்டுகளையும் லிப்பிடுகளையும் சுவாசித்தல் மூலம் வளர்ச்சிதை மாற்றமடையச் செய்து ஆற்றலை இவை உற்பத்தி செய்கின்றன [3]. மனிதன் உட்பட காற்றைச் சுவாசிக்கும் அனைத்து உயிர்னங்களும் கார்பன் டை ஆக்சைடை காற்றில் கலக்கச் செய்கின்றன. மீனின் செதிள்களில் இருந்து இவ்வாயு தண்ணீரில் விடப்படுகிறது. கரிம வேதியியல் பொருட்கள் சிதைவடையும் போதும், ரொட்டி, பீர் மற்றும் மதுபானங்கள் தயாரிக்கையில் சர்க்கரையை நொதிக்கச் செய்யும் போதும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், புதைப்படிவுகள், நிலக்கரி, மரம் போன்ற கரிமப் பொருட்கள் காற்றில் எரியும் போதும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. பேரளவில் நிகழ்த்தப்படும் ஆக்சிசனேற்ற செயல்முறைகளில் விரும்பத்தகாத உடன் விளைபொருளாக கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. உதாரணமாக அக்ரைலிக் அமிலம் தயாரிப்பில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு உடன் விளை பொருளாக உருவாகிறது [4][5][6][7].
பற்றவைத்தல் மற்றும் தீ அணைப்பு கருவிகளில் கார்பன் டை ஆக்சைடு ஒரு மந்த வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. காற்று துப்பாக்கிகள் மற்றும் எண்ணெய் மீட்பு கருவி ஆகியவற்றில் அழுத்தமளிக்கும் வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஓர் இரசாயன மூலப்பொருளாகவும் மற்றும் காபியில் உள்ள காபீனை நீக்க உதவும் திரவ கரைப்பான் ஆகவும், மீ உலர்த்தியாகவும் கார்பன் டை ஆக்சைடு வாயு பயன்படுத்தப்படுகிறது [8]. குடிநீர் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களிலும் பொங்குதலுக்காக கார்பன் டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது. குளிரூட்டிகளில் பயன்படும் உலர் பனிக்கட்டியாகவும் திட கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது.
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு காரணமாக வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் டை ஆக்சைடு 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 99.4% CO2 உமிழ்வு என பிரதிநிதித்துவப்படுத்துகிறது [9]. பூமியின் வளிமண்டலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நீண்டகால பைங்குடில் வாயுவாக கார்பன் டை ஆக்சைடு உள்ளது. தொழில்துறை புரட்சி, மானுடவியல் உமிழ்வுகள், புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாடு, காடுகள் அழித்தல் ஆகிய செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு வேகமாக அதிகரித்து புவி வெப்பமடைவதற்கு வழிவகுத்தது. தண்ணீரில் கரைந்து கார்போனிக் அமிலமாக உருவாகும் என்பதால் கடல் நீரை இது அமிலமாக்கியும் வருகிறது.