சேம்சு பீபிள்சு
From Wikipedia, the free encyclopedia
பிலிப்பு சேம்சு எடுவின் பீபிள்சு (Phillip James Edwin Peebles (பிறப்பு: ஏப்பிரல் 25, 1935) ஒரு கனடிய-அமெரிக்க இயற்பியலாளரும் கோட்பாட்டு அண்டவியலாளரும் ஆவார், இவர் இப்போது பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் அய்ன்சுட்டீன் அறிவியல் தகைமைப் பேராசிரியராக உள்ளார்.[1][2] இவர் 1970 இல் இருந்து, கோட்பாட்டு அண்டவியல் வல்லுனர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். இவர் முந்துபாழ்மை அணுக்கருத் தொகுப்பு, கரும்பொருண்மம், அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு, அண்டப் பேரியல் கட்டமைப்பு உருவாக்கம் ஆகிய புலங்களில் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளார். இவரது பெயர்பெற்ற மூன்று நூல்களான அண்டக் கட்டமைப்பியல் (1971), புடவியின் பேரளவுக் கட்டமைப்பு (1980), அண்டக் கட்டமைப்பின் நெறிமுறைகள் (1993) ஆகியவை இப்புலத்தில் செந்தரப் பாடநூல்கள் ஆகும்.
சேம்சு பீபிள்சு Jim Peebles | |
---|---|
பிறப்பு | பிலிப்பு சேம்சு எடுவின் பீபிள்சு Phillip James Edwin Peebles ஏப்ரல் 25, 1935 (1935-04-25) (அகவை 89) [[[வினிப்பெக்]], மானிட்டோபா, கனடா |
துறை |
|
பணியிடங்கள் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் |
|
அறியப்படுவது | பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் |
விருதுகள் | எடிங்டன் பதக்கம் (1981) கைன்மன் பரிசு (1982) புரூசு பதக்கம் (1995) அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1998) அண்டவியலில் குரூபர் பரிசு (2000) ஆர்வே பரிசு (2001) இழ்சா பரிசு (2004) கிராஃபோர்டு பரிசு (2005) டிராக் பதக்கம் (2013) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2019) |
இவர், இவரது அண்டக் கட்டமைப்பியல் கண்டுபிடிப்புகளுக்காக 2019 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மதிப்பில் அரைப்பகுதியை ப் பெற்றார்.[3] சூரினை ஒத்த விண்மீனைச் சுற்றிவரும் புறவெளிக்கோளைக் கண்டுபிடித்த [[மீசல் மயோர்],] [[திதியே குவெலோ ஆகியவருடன் இப்பரிசைப் பகிர்ந்துகொண்டார்.[4][5][6]ரிவரது பெரும்பாலான் பணி முதல் சில நொடிகலிலான புடவியின் உருவாக்கத்தைப் பற்றியது என்றாலும் முழுமுதல் தொடக்கம் குறித்து, ரொருவர் முழுமுதல் தொடக்கம் குறித்து கருதும்போதும்போது , உண்மையில் நம்மிடம் தொடக்கம் பற்றிய கோட்பாடெதுவும் இல்லை என்பது தெளிவாகிறது" என்று கூறியுள்ளார்.[7]
பீபுள்சு தன்னை உறுதியான அறியொணாவாதியாக அறிவித்துக் கொண்டார்.]].[8]