இந்திய நாடாளுமன்றம்
மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளை உள்ளடக்கிய இந்திய ஆட்சி மன்றம் / From Wikipedia, the free encyclopedia
இந்திய நாடாளுமன்றம் (Parliament of India) என்பது இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இது மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.
இந்திய நாடாளுமன்றம் | |
---|---|
வகை | |
வகை | |
அவைகள் | மாநிலங்களவை (மேலவை) மக்களவை (கீழவை) |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 26 சனவரி 1950 (74 ஆண்டுகள் முன்னர்) (1950-01-26) |
முன்பு | இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் |
தலைமை | |
மாநிலங்களவைத் துணைத் தலைவர் | |
பெரும்பான்மைத் தலைவர் (மாநிலங்களவை) | |
எதிர்க்கட்சித் தலைவர் (மாநிலங்களவை) | |
மக்களவைத் துணைத்தலைவர் | காலி 23 மே 2019 முதல் முதல் |
பெரும்பான்மைத் தலைவர் (மக்களவை) | |
எதிர்க்கட்சித் தலைவர் (மக்களவை) | காலியிடம் (26 மே 2019) |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 788 543 மக்களவை உறுப்பினர்கள் |
மாநிலங்களவை அரசியல் குழுக்கள் |
|
மக்களவை அரசியல் குழுக்கள் |
|
தேர்தல்கள் | |
அண்மைய மாநிலங்களவை தேர்தல் | 10 ஜூன் 2022 |
Last மக்களவை election | 11 ஏப்ரல் – 19 மே 2019 |
அடுத்த மாநிலங்களவை தேர்தல் | 2023 |
அடுத்த மக்களவை தேர்தல் | மே 2024 |
கூடும் இடம் | |
புதிய நாடாளுமன்றக் கட்டிடம், புது தில்லி, இந்தியா | |
வலைத்தளம் | |
parliamentofindia | |
அரசியலமைப்புச் சட்டம் | |
இந்திய அரசியலமைப்பு |
அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்குக் கடமையுற்றது.
மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களை கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரைக் குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப பிற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.