கோட்டைக் கொச்சி
கேரளத்தின், எர்ணாகுளம் மாவட்டம், கொச்சியின் அருகில் உள்ள பகுதி / From Wikipedia, the free encyclopedia
கோட்டைக் கொச்சி (Fort Kochi) என்பது இந்தியாவின் கேரளத்தின் ஒரு பகுதியான கொச்சி நகரத்தின் சுற்றுப்புறமாகும். கோட்டைக் கொச்சி என்ற பெயர் இமானுவேல் கோட்டை என்பதிலிருந்து வந்தது.[1] போர்த்துக்கீசிய பேரரசின் கட்டுப்பாட்டுக்கு இந்திய மண்ணில் முதன் முதலில் வந்த ஐரோப்பியருக்கான முதல் கோட்டை இதுவாகும்.[2] இது கொச்சியின் முதன்மை நிலப்பரப்பின் தென்மேற்கில் உள்ள ஒரு சில தீவுகள் கொண்ட ஒரு பகுதியாகும். இது ஒட்டுமொத்தமாகப் பழைய கொச்சி அல்லது மேற்கு கொச்சி என அழைக்கப்படுகிறது. இதை ஒட்டி மட்டாஞ்சேரி பகுதி உள்ளது. 1967 ஆம் ஆண்டில், இது உட்பட மூன்று நகராட்சிகளும் மற்றும் சில அண்மைப் பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு கொச்சி மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கோட்டைக் கொச்சி
Cochim de Baixo | |
---|---|
ஆள்கூறுகள்: 9.961°N 76.243°E / 9.961; 76.243 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 2,34,990 |
மொழிகள் | |
• அதிகார்ப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 682001 |
வாகனப் பதிவு | KL-43 |
கோட்டைக் கொச்சி பாரம்பரியமும், பண்பாடும் நிறைந்தது. இது வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் நேஷனல் ஜியோகிராஃபிக்கின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் முதல் 25 இடங்களில் ஒன்பதாவது இடத்தை இது பிடித்தது.[3]